வேப்பம்பூ துவையல்: ஆறு மாதத்திற்கு ஒருமுறை பேதி மாத்திரையும், வருடத்திற்கு ஒருமுறை பூச்சி கொல்லி மருந்தினையும் உட்கொள்வது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்த வகையில் இயற்கையான முறையில் நமது வயிற்றில் இருக்கக்கூடிய பூச்சிகளை எளிதில் கொள்ளக்கூடிய வேப்பம்பூ பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
Neem-Flower-Thuvaiyalஅந்த வேப்பம் பூவை பயன்படுத்தி நீங்கள் வேப்பம்பூ தொகையலை செய்து சாப்பிடுவதின் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பூச்சி தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம். அப்படிப்பட்ட வேப்பம்பூ துவையலை எப்படி செய்யலாம் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
வேப்பம்பூ துவையல் செய்ய தேவையான பொருட்கள்
1.வேப்பம்பூ கால் கப்
2.கடுகு 1/4 டீஸ்பூன்
3.உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
4.காய்ந்த மிளகாய் மூன்று 5.புளி சிறிதளவு
6.பொடித்த வெல்லம் ஒரு டேபிள் ஸ்பூன்
7.துருவிய தேங்காய் அரை கப்
8.பூண்டு பத்து பல்
9.உப்பு தேவையான அளவு
10.எண்ணெய் தேவையான அளவு
Neem-Flower-Thuvaiyalசெய்முறை
முதலில் வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி அதில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதே வாணலியில் தீயை குறைத்து வைத்து எண்ணெயில் வேப்பம் பூவை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
Neem-Flower-Thuvaiyalபின்னர் வறுத்து வைத்திருக்கும் இந்த பொருட்களோடு நீங்கள் புலி, வெல்ல,ம் பூண்டு தேங்காய் துருவல் இவை அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பையும் போட்டு மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அரைத்து வைத்திருக்கும் இந்த கலவையை நீங்கள் மற்றொரு பௌலில் போட்டுவிட்டு தேவை என்றால் தாளித்துக் கொள்ளலாம் இல்லையென்றால் அப்படியே நீங்கள் சாப்பிடலாம்.
Neem-Flower-Thuvaiyalஇந்த வேப்பம்பூ துவையலை நீங்கள் சாதம் அல்லது இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடுவதின் மூலம் சுவை அலாதியாக இருக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் மாதத்தில் ஒருமுறையாவது இந்த தொகைகளை செய்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
எனவே மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் பின்பற்றி உங்கள் வீட்டில் எந்த வேப்பம்பூ தொவைகளை செய்து பெரியவர்களை அசத்தி விடுங்கள்.