சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு எந்த வித கெடுதலையும் செய்யாத பச்சை நிலக்கடலை மிக அருமையான ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களில் ஒன்று. இந்த பச்சை நிலக்கடலையை நீங்கள் அவித்து சாப்பிடுவதின் மூலம் சுவை கூடுதலாக இருப்பதோடு நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
#image_titleஎனவே பச்சை வேர்க்கடலை கிடைத்தால் நீங்கள் இது போல வேர்க்கடலை மசாலா பொரியல் செய்து குடும்பத்தோடு சாப்பிடுவதின் மூலம் மகிழ்ச்சி அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்.
பச்சை வேர்கடலை மசாலா பொரியல் செய்ய தேவையான பொருட்கள்
1.பச்சை வேர்க்கடலை அரை கிலோ
2.சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது 20
3.வரமிளகாய் 3
4.உப்பு தேவையான அளவு
தாளிக்க
5.கடுகு அரை டீஸ்பூன் 6.உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்
7.எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
8.மசாலா பொடி அரை டீஸ்பூன்
Peanut Masala Poriyalசெய்முறை
முதலில் வாங்கி வந்திருக்கும் பச்சை வேர்க்கடலையின் தோல்களை நீக்கி விடுங்கள். பிறகு அந்த வேர்க்கடலையை நீரில் போட்டு நன்கு கழுவி வடித்து ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு நீங்கள் சின்ன வெங்காயத்தை உரித்து பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதுபோல வரமிளகாயை ஒன்று இரண்டாக வெட்டி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து நீங்கள் கழுவி வைத்திருக்கும் பச்சை வேர்க்கடலையை குக்கரில் போட்டு தேவையான அளவு உப்பை சேர்த்து நீரையும் விட்டு குறைந்தது, ஐந்து முதல் எட்டு விசில் வரை விட்டு எடுத்துக் கொள்ளவும்.
Peanut Masala Poriyalஇதனை அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி தாளிக்கும் பொருட்களான கடுகு, உளுந்து பருப்பை போட்டு பொரிக்க விடவும். இதை பொறிந்த உடன் இதனோடு வெட்டி வைத்திருக்கும் வரமிளகாய், சின்ன வெங்காயம் சிறிதளவு உப்பினை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள்.
இது பொன் நிறமாக வதங்கட்டும். பொன் நிறமாக வதங்கிய பிறகு மசாலா பொடியை அதில் போட்டு ஒரு கிளறு கிளறி விட்டு குக்கரில் வைத்திருக்கும். வேர்க்கடலையை எடுத்து இதில் போட்டு நன்கு கிளறி விடுங்கள். இப்போது சூப்பரான பச்சை வேர்க்கடலை மசாலா பொரியல் ரெடி.