“யார் அந்த வாலையம்மன்..!” – சித்தர்கள் ரகசியமாக வழிபட்ட கடவுளா?

சித்தர்கள் பற்றி அதிக அளவு கேள்விப்பட்டிருப்பீர்கள். குறிப்பாக 18 சித்தர்கள் இருந்ததாகவும் அவர்கள் பலவித சித்துக்களை செய்தவர்கள். அப்படிபட்டவர்கள் வாலையம்மனை வழிபட்டு இருக்கிறார்களா? அட யார் இந்த வாலையம்மன்? இந்த பெண் தெய்வத்தின் சிறப்பு என்ன என்பது பற்றி கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வாலையம்மன் என்பது வாலைபெண் தெய்வம் என்று அறியப்படுகிறது. மேலும் தெய்வத்தை பாலா என்று அழைத்திருக்கிறார்கள். சிவ வழிபாடை அதிகளவு மேற்கொண்ட சித்தர்கள் அனைவருமே சில சக்திகளை பெறுவதற்காக ரகசிய வழிபாடுகளை செய்திருக்கிறார்கள்.

valaiyamman

 அப்படி அவர்கள் மேற்கொண்ட ரகசிய வழிபாட்டில் ஒப்பற்ற சக்திகளை கொண்ட தெய்வமாக இந்த வாலையம்மன் என்கிற பாலா வழிபாடு நடந்திருக்கிறது.

யார் இந்த வாலையம்மன்?

தமிழ் இலக்கியங்களில் பிள்ளைத்தமிழ் பருவங்களில் வாலை என்ற சொல் பருவத்தை குறிக்கும் ஒரு சொல்லாக கூறப்பட்ட உள்ளது. அதாவது ஒன்பது வயது நிரம்பிய பெண் குழந்தையை வாலை என்று அழைப்பார்கள்.

எனவே 9 வயது நிரம்பிய பெண் குழந்தையை வழிபடும் முறையைத்தான் வாலையம்மன் வழிபாடு என்று கூறியிருக்கிறார்கள். பெண் என்றாலே சக்தி, வீரம், நாணம், தாய்மை போன்ற குணங்கள் அதிக அளவு இருக்கும்.

valaiyamman

மேலும் அன்னை லலிதா திரிபுர சுந்தரி தான் பண்டாசுர வதத்தின் போது படைகளை திரட்டி மந்திரி மற்றும் படைத்தளபதியாக மாதங்கி மற்றும் வராகியை வைத்து யோகினி சேனைகளோடு சென்று போர் புரிந்தாள்.

அந்தப் போரில் போருக்கு வந்த பண்டாசுரனின் புத்திரர்களை அழிக்க லலிதா தனதுள் இருந்து ஒரு சிறு பெண்ணை போருக்கு அனுப்பி வைத்தார். அந்தக் குழந்தை அனைவரையும் போரில் கொன்று வெற்றியோடு திரும்பியது.

valaiyamman

 அது குழந்தைதான் பாலாம்பிகை இந்த அம்மனைதான் வாலாம்பிகை, வாலையமன், அசோக சுந்தரி, பால திரிபுரசுந்தரி பாலா என்ற திருநாமங்களில் நாம் அழைக்கிறோம்.

நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் இந்த அம்மன் கையில் ஜெபமாலை, சுவடிகள் கொண்டு அபய வரத அஸ்தானத்துடன் பட்டுப்பாவாடை  அணிந்து வெண்தாமரையில் வைத்திருப்பார்.

சித்துக்கள் அனைத்தையும் பெற வேண்டுமென்றால் இந்த வாலை அம்மனின் அருள் கட்டாயம் இருந்தால்தான் பெற முடியும் என்பதை முற்றும் துறந்த சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.

valaiyamman

அதற்கு உதாரணமாக சித்தர்கள் முதல்வரான அகத்தியர் கூறிய லலிதா சஹஸ்ரநாமத்தில் பாலா லீலா வினோதினி என்ற பெயரை கூறியிருப்பார்.

எனவே இந்த தெய்வத்தை அகத்தியர் மட்டுமல்லாமல் திருமூலர், போகர் என அனைத்து சித்தர்களும் வழிபட்டு இருக்கிறார்கள். இந்த குழந்தை வாலை அம்மனை வழிபட்டு தான் அவர்கள் சித்திகளை பெற்றிருக்கிறார்கள்.

இப்போது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் இந்த வாலை அம்மன் தான் பாலாம்பிகை என்பது, எனவே நீங்களும் பாலாம்பிகையை வழிபட்டு அனைத்து விதமான செல்வங்களையும் பெறுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …