அழகுக் கலையில் திராட்சை: திராட்சை பழத்தில் இருக்கும் எண்ணற்ற வைட்டமின்கள், மினரல்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலுக்கு மட்டுமல்லாமல் அழகுக்கும் மிகப்பெரிய பணியை செய்கிறது.
grapes in beautyஇதில் சிகப்பு திராட்சை, பச்சை, கருப்பு திராட்சை என்ற பாகுபாடுகள் தேவையே இல்லை. எல்லாவிதமான திராட்சைகளுமே உங்கள் சருமத்துக்கு வேண்டிய போசாக்கை தரக்கூடியது.
அழகுக் கலையில் திராட்சை
திராட்சையில் அதிகப்படியான ஆன்டிஆக்சிடென்ட்கள் இருப்பதால் இது உங்கள் சருமத்தை க்ளன்ஸ் செய்ய உதவுகிறது. அது மட்டுமல்லாமல் சருமங்களில் இருக்கும் அழுக்குகளை நீக்க திராட்சை சாறை எடுத்து உங்கள் கை, முகம் சருமங்களில் தடவி பத்து நிமிடங்கள் அப்படியே காய விட்டு பின் நீங்கள் குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலம் சருமங்களின் இருக்கும் அழுக்குகள் அத்தனையும் நீங்கிவிடும்.
grapes in beautyவைட்டமின் சி அதிக அளவு திராட்சையில் இருப்பதால் தோல் சுருக்கத்தை தவிர்க்க இது உதவி செய்கிறது. எனவே தூங்குவதற்கு முன்பு திராட்சை பழத்தை அரைத்து பேஸ் பேக்காக போட்டுக் கொள்வதின் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி இளமையாக காட்சியளிப்பீர்கள்.
திராட்சை பழத்தில் இருக்கும் முக்கிய வேதிப்பொருட்களான ப்ரோந்தோசியனிடின்ஸ், ரிசர்வேரட்ரோல் சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவி செய்கிறது. இதனால் சூரிய ஒளியின் மூலம் ஏற்படுகின்ற கருமை நிறம் நமது சருமங்களில் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
சருமத்தில் இருக்கின்ற இறந்த செல்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் இதில் இருக்கும் ஆல்பா ஹைட்ராக்சி ஆசிட் நமது சருமத்தை பொலிவாக்க உதவி செய்கிறது.
grapes in beautyமுகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ளது என்று சங்கடப்படுபவர்கள் தினமும் கருப்பு திராட்சையை அரைத்து அதை முல்தானி மெட்டியோடு சேர்த்து 15 நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே போட்டுவிட்டு, காத்திருந்து பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுவதன் மூலம் எண்ணெய் பசையான சருமம் மாறிவிடும்.
திராட்சையில் இருக்கக்கூடிய ஃபைபர் மற்றும் தண்ணீர் உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. மேற்கூறிய அழக் குறிப்புகளை நீங்களும் பயன்படுத்தி உங்களை மேலும் அழகாக கொள்ளலாம்.