பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? – அப்ப இத தினமும் சாப்பிடுங்க..!

பெண்கள் வீட்டின் கண்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அந்தப் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக இந்த ஐந்து உணவுகளை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியமானது. இதனை நீங்கள் உங்கள் உணவை சேர்த்துக் கொள்வதன் மூலம் நோயின்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

Womens Healthy Food

அப்படி என்ன அந்த ஐந்து உணவுகள் அதை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் எந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பெண்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய 5 உணவு பொருட்கள்

1.அக்ரூட் என்ற கொட்டை பொருளை நீங்கள் உங்கள் உணவில் தினமும் சேர்த்துக் கொள்வதின் மூலம் இது உங்கள் மூளையை அற்புதமாக வேலை செய்ய வைக்கிறது. அது மட்டும் அல்லாமல் பல நோய்களை எதிர்த்துப் போராட உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும் உடல் வலியை குறைக்கவும், தேவையான ஆற்றலை தரவும், வளர்ச்சதை மாற்றத்தை ஏற்படுத்தவும் உங்களுக்கு உதவி செய்கிறது.

Womens Healthy Food

2.தேனில் ஊற வைத்திருக்கும் அத்திப்பழத்தை சாப்பிடுவதின் மூலம் வைட்டமின் ஏ, பி1, பி2, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார் சத்து அதிக அளவு கிடைக்கிறது. இதனால் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படுகின்ற எலும்பு தேய்மானம் தடுக்கப்படுவதோடு, வயிறு சார்ந்த நோய்களையும் குணப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது.

3.பூண்டில் உள்ள ஆண்டிபயாட்டிக், ஆன்டிபாக்டீரியல் பண்புகள் உங்களுக்கு வலி நிவாரணியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவி செய்வதால் தினமும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Womens Healthy Food

4.உணவுக்கு நறுமணம் சேர்க்கும் ஏலக்காயை மசாலா பொருள் என்று அந்த சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் உங்களுக்கு புத்துணர்வு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் வாயில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களையும் அழித்துவிடும்.

Womens Healthy Food

5.ரத்த சோகையை தடுத்து, ரத்தத்தை அதிகரிக்கவும் சுவாச நோய்களை தடுக்கவும், மார்புக்கு வலிமை தரவும் நீங்கள் தினமும் பேரிச்சம் பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.

எனவே மேற்கூறிய இந்த பொருட்களை பெண்கள் தினமும் அவர்கள் உணவோடு எடுத்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டு இன்று முதல் இந்த ஐந்து பொருட்களையும் உங்கள் உணவோடு சேர்த்து விடுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam