“சித்தர்கள் சொன்ன அற்புத மூலிகை ஆடாதோடா..!” – நன்மைகள் பற்றி பார்ப்போமா?

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்த வேண்டிய மூலிகைகள் பல உள்ளது. அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மூலிகை இந்த ஆடாதோடா. பொதுவாக வயல்வெளிகளிலும், ஈரப்பதம் இருக்கக்கூடிய இடங்களிலும் அதிக அளவு வளரக்கூடிய தன்மை கொண்டது. இந்த மூலிகை பல நோய்களை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது. இந்த மூலிகை குறிப்பாக சுவாச மண்டலத்தில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

Adathoda

ஆடாதோடா தரும் நன்மைகள்

👍ஆடாதோடா இலைகளை கசாயமாக போட்டு நீங்கள் குடிப்பதின் மூலம் இருமல், சளி, மூக்கடைப்பு, தொண்டைப்புண், ஆஸ்துமா மற்றும் மூச்சு குழலில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் நீங்கும் தன்மை கொண்டது.

👍மேலும் இந்த ஆடாதோடா காய்ச்சல், காச நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சில பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களை எதிர்த்து போராடி அழிக்கக்கூடிய தன்மை கொண்டது.

Adathoda

👍 சருமத்தில் ஏற்படும் அலர்ஜியை தடுக்க இதை நீங்கள் கஷாயமாக குடித்தால் போதும். மேலும் அடிக்கடி ஏற்படும் வாயு தொல்லையிலிருந்து விடுபடவும், வயிற்று வீக்கம், வாய் பிடிப்பு போன்றவற்ற அனுபவிக்கின்றவர்கள் அதிலிருந்து விடுதலை ஆக இந்த ஆடாதொடையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும்  சிறந்த மூலிகையாக திகழ்கிறது.

👍சிறுநீரகங்களில் இருக்கும் நச்சு கழிவுகளை வெளியேற்ற உதவி செய்வதோடு, சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக உள்ளது. இதில் இருக்கும் ஆல்கலாய்டுகள்  தோலில் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது. இது முகப்பரு, கொப்பளங்கள், அரிப்பு போன்றவற்றிலிருந்து உங்களை பாதுகாக்க உதவி செய்கிறது.

Adathoda

👍மூட்டு வலியை குணப்படுத்துவதில் மிகவும் சிறப்பாக செயல்படும். இந்த ஆடாதோடா குடலில் ஏற்படும் அல்சர் நோயையும் எதிர்த்துப் போராடுகிறது. எனவே அல்சர் நோயாளிகள் ஆடாதோடா இலைச் சாறை குடித்தால் விரைவில் அல்சர் குணமாகும்.

Adathoda

மூலிகை என்று அளவுக்கு அதிகமாக நீங்கள் எடுத்துக் கொண்டால் பாதிப்புகள் ஏற்படும். எனவே நீங்கள் போதிய அளவு இடைவேளை விட்டு குறைந்த அளவு கஷாயத்தை உட்கொள்வதின் மூலம் மேற்கூறிய நன்மைகள் உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam