இயற்கை அழகு குறிப்புகள்: என்ன என்ன ஐட்டங்களோ என்று நாம் சாப்பிடும் போது கேட்போம். அந்த சாப்பிடும் காய்கறிகளின் மூலமே நமது உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் இயற்கை அழகும் கிடைக்கிறது, என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது உண்மைதான்.
நீங்கள் சாப்பிடும் காய்கறிகளில் இருந்து உங்கள் மேனி அழகை எப்படி அழகாக மாற்றலாம் என்பது பற்றிய அழகு குறிப்புகளை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
இயற்கை அழகு குறிப்புகள்
உங்கள் வீட்டில் வெள்ளை பூசணிக்காய் இருந்தால் அதை துண்டாக்கி கண்களை சுற்றி வைப்பதின் மூலம் கண்களில் இருக்கக்கூடிய கருமை நிறம் மாறிவிடும்.
உருளைக்கிழங்கை சாறெடுத்து அதை உங்கள் முகம் மட்டுமல்லாமல் சருமங்களில் தேய்த்து விடுவதின் மூலம் சூரிய ஒளிகள் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களின் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதின் மூலம் அதனால் ஏற்படும் கருமை நிறமும் மறைந்துவிடும்.
nature beauty tipsவெள்ளரிக்காய் இருக்கக்கூடிய சாறை எடுத்து அதனோடு சந்தன பொடி, கடலை மாவு போன்றவற்றை சம அளவு கலந்து உங்கள் முகத்திற்கு பேஸ் பேக்காக போட்டு வந்தால் முகம் அழகாக மாறிவிடும்.
மேலும் வறண்ட சருமத்தைக் கொண்டிருப்பவர்கள் கிளசரின் உடன் ரோஸ் வாட்டரை கலந்து எலுமிச்சை சாறையும் சேர்த்து உங்கள் முகத்தில் தடவுவதன் மூலம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும்.
தக்காளி சாறினை உங்கள் முகத்தில் தேய்ப்பதின் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள், கரும்புள்ளிகள் விரைவில் நீங்கும். இதனை தொடர்ந்து வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்திப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
nature beauty tipsபீட்ரூட் சாறு நீங்கள் பேஸ் பேக்காக பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய மாசு, மருக்கள் நீங்கிவிடும்.
மேற்கூறிய இயற்கையான எந்த அழகு குறிப்புகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முகம் பளிச்சென்று மாறுவதோடு எப்படி இப்படி வெள்ளையாக மாறிவிட்டீர்கள் என்று பலரும் உங்களைக் கேட்கும் விதத்தில் உங்களது சருமத்தில் நிறமாற்றத்தை பார்த்து அனைவரும் வாய் பிளந்து வியப்பார்கள்.