“பதினெண் சித்தர்களும் ஒருவர் புலிப்பாணி..!” – பற்றிய ஓர் அலசல்..!

புலி மீது அமர்ந்து கொண்டு தனது குருவுக்கு நீரைக் கொண்டு வந்ததால் புலிப்பாணி என்ற பெயரை பெற்றிருக்கும் இவர் 18 சித்தர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும் இவர் போகரின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஜோதிடத்தில் புலியாகவும் மருத்துவத்தில் சிறந்தவராகவும் விளங்கியவர். அட்டமா சித்திகளில் கைதேர்ந்து விளங்கிய இவர் எப்போதும் தனது குருவுக்கு தேவையான மூலிகைகளை மலைக்கு மலை சென்று சேகரித்து வந்து தந்தவர்.

pulipani siddhar

இவரது குருவான போகர் பழனி முருகன் சிலையை செய்த பிறகு சீன தேசத்திற்கு பயணத்தை மேற்கொண்டார். அங்கு இவர் தனது தவ வலிமைகளை இழந்து விட புலிப்பாணி சித்தரே அவரை தனது முதுகில் சுமந்து கொண்டு பழனியில் கொண்டு வந்து தன்னுடைய வலிமைகளை அளித்ததாக செவி வழி செய்திகள் உள்ளது.

குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற சொல்லை கேள்விப்பட்டிருப்போம். அது குருவான போகருக்கும் சிஷ்யரான புலிப்பாணிக்கும் பொருந்தக்கூடிய சொற்றொடராக இருக்கும்.

pulipani siddhar

மூலிகை வைத்தியத்தில் கைதேர்ந்த புலிப்பாணி பலருக்கும் மூலிகை வைத்தியம் செய்து நோயிலிருந்து காத்திருக்கிறார். போகர் இறந்த பிறகு அவரின் சமாதிக்கு பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.

எனவே இந்த புலிப்பாணி சித்தரை மனதார நினைத்தாலே அவர் நேரடியாக வந்து மருந்து தருவதாக சொல்லப்படுகிறது. இவரும் தனது குருநாதர் வாழ்ந்த பழனி மலையிலேயே சமாதி ஆக்கிவிட்டதாக கூறுகிறார்கள்.

pulipani siddhar

மேலும் இந்த புலிப்பாணி சித்த சீனாவை சேர்ந்தவர். இவரின் ஜீவ சமாதி பழனி மலை அடிவாரத்தில் அதாவது நீங்கள் படிக்கட்டுகளை ஏறுவதற்கு மிக அருகிலேயே உள்ளது.

அதுமட்டுமல்லாமல் பழனி தண்டாயுதபாணி சிலையை செய்வதற்கு இந்த புலிப்பாணி சித்தரும் கோரக்க சித்தரும் உதவிதாக கூறப்படுகிறது.

புலிப்பாணி சித்த பல நூல்களை எழுதி இருக்கிறார் அதில் மருத்துவத்தை சார்ந்த புலிப்பாணி சித்தர் வைத்தியம் 500 சாலம் 325 வைத்திய சூத்திரம் 200 போன்றவற்றை கூறலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam