“ரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமா..!” – இந்த 5 உணவுகள சாப்பிடுங்க..!

ரத்த ஓட்டத்தை அதிகரிக்க: நமது உடலில் ஓடுகின்ற ரத்தமானது சீரான முறையில் ஓடுவதால் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது. அதே சீரற்ற முறையில் இந்த ரத்த ஓட்டம் இருக்கும் சமயத்தில் உங்களுக்கு தசைகளில் வலிகள், மரத்துப்போன உணர்வு, கை, கால்களில் குளிர்ச்சி ஏற்படுவது போன்றவை ஏற்படும்.

Blood circulation food

எனவே உங்கள் ரத்த ஓட்டத்தை சீர் செய்யக்கூடிய உணவுகளை நீங்கள் உங்கள் உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க கூடிய உணவுகள் என்னென்ன உள்ளது. அதில் மிகவும் முக்கியமான உணவு என்ன? அதை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்கள் ரத்த ஓட்டம் எப்படி அதிகரிக்கும் என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்

ரத்த ஓட்டத்தை அதிகரிக்க தினமும் மாதுளை மற்றும் வெங்காயத்தை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து தரும்.

Blood circulation food

சிட்ரஸ் குடும்பத்தைச் சார்ந்த பழங்களை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் வைட்டமின் சி உடலுக்கு அதிகளவு கிடைப்பதன் மூலம் உங்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பதோடு ரத்த ஓட்டம் சீராகிறது.

Blood circulation food

மேலும் நீங்கள் தக்காளி பழத்தை உங்கள் உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்த ஓட்டத்திற்கு இவை உதவி செய்கிறது. குறிப்பாக தக்காளியை இருக்கக்கூடிய ஆஞ்சியோ டென்ஷின்களை மாற்றும் தன்மைஅதிகளவு உள்ளதால் இவை ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

பாதாம், வால்நட் போன்ற உலர் நட்ஸ்களை நீங்கள் எடுத்து சாப்பிடும் போது ரத்த ஓட்டத்தை இது அதிகரிக்கும். இதற்கு காரணம் ரத்த குழாய்களில் ஏற்படும் தடிப்பு தன்மை மற்றும் அழுத்தங்களை இது குறைக்கிறது.

Blood circulation food

ஒமேகா மூன்று, ஃபேட்டி ஆசிட் நிறைந்த பொருட்களை நீங்கள் உணவில் கேட்டுக் கொள்வதின் மூலம் மாரடைப்பு ஏற்படுத்தும் காரணிகளை தடுத்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே மீன் மற்றும் கடல் உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam