வீட்டு குறிப்புகள்: எப்போதுமே வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய சின்ன, சின்ன வீட்டு குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் வீட்டை மேலும் அழகாக மாற்றிக் கொள்வதோடு உங்களது வேலைகளை எளிதாகவும் முடித்து விடலாம்.
இந்த வகையில் இன்று வீடு மற்றும் தோட்டம் பகுதியில் உங்கள் வீட்டை எவ்வளவு ஜோராக வைத்துக் கொள்ளலாம் என்பதற்காக சின்ன, சின்ன வீட்டுக்குறிப்புகளை தந்திருக்கிறோம். இவற்றை பயன்படுத்தி உங்கள் வீட்டையும் நீங்கள் அழகுபடுத்தி விடுங்கள்.
சின்ன சின்ன வீட்டு குறிப்புகள்
home tipsநீங்கள் துவைக்கக்கூடிய துணியில் அதிக அளவு எண்ணெய் பிசுக்கு இருந்தால் அதை எவ்வளவு நேரம் ஊற வைத்து துவைத்தாலும் எண்ணெய் பிசுபிசுப்பு போகாது. அதை எளிதில் நீக்க நீங்கள் சிறிதளவு சோடா மாவுடன் கரி தூள்களை சேர்த்து ஊற வைத்து துவைத்து பாருங்கள் துணி பளிச்சென்று மாறிவிடும்.
உங்கள் வீட்டில் இருக்கும் தரையில் அழுக்கு அதிகமாக படிந்து இருந்தாலும், கிருமிகள் அதிக அளவு இருந்தாலும் வெய்ட் வினிகரை வெந்நீரில் கலந்து உங்கள் வீட்டை துடைத்தால் போதும் தரையில் இருக்கும் கிருமிகள் அடியோடு அழிவதோடு தரையும் பளபளப்பாக புதிய தரையைப் போல பளிச்சிடும்.
home tipsசப்பாத்தி, பூரிக்காக மாவு பிசையும் போது உங்கள் கைகள் உலர்ந்து போய் கழுவ கஷ்டமாக இருக்கும். எளிதாக சரி செய்ய நீங்கள் முதலில் உங்கள் கைகளை கழுவி விட்டு பிறகு பாத்திரம் தேய்க்கும் மஞ்சையை எடுத்து உங்கள் விரல்களை லேசாக தேய்த்துவிட்டால் போதும் நீர் அதிகம் செலவாகாமல் எளிதில் உங்கள் கையில் இருக்கும் பிசுபிசுப்பான அந்த மாவு எளிதில் கரைந்து சென்று விடும்.
நீங்கள் பாக்கெட்களில் நெய் மற்றும் டால்டா வாங்கி வந்தால் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் உங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் அது கெட்டியாகும். பிறகு கவரை பிரித்து அப்படியே கொஞ்சம் கூட வீணாகாமல் உங்கள் பாத்திரத்தில் போட்டு விடலாம்.
home tipsமேற்கூறிய இந்த குறிப்புக்களை நீங்கள் பயன்படுத்தி நிச்சயமாக உங்கள் வேலைகளை சுலபமாக்கி கொள்ளலாம். அப்படி இதன் மூலம் உங்கள் வேலை சுலபமாக முடிந்தால் நீங்கள் அது பற்றி உங்களது கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.