இன்று இருக்கும் கணினி காலத்தில் குளிப்பதற்கே நேரம் கிடைக்காமல் தட்டு தடுமாறி காக்கா குளியல் குளித்துப் போகும் நபர்களுக்கு எண்ணெய் குளியல் பற்றிய முக்கியத்துவம் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
oil bathஆனால் நமது முன்னோர்கள் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அப்படி என்னை தேய்த்துக் கொடுப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.இதில் அப்படி என்ன நன்மைகள் நமக்கு ஏற்படும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
எண்ணெய் குளியலில் ஏற்படும் நன்மைகள்
மாதத்தில் இரண்டு முறை அல்லது ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் உங்கள் தோல்களில் இருக்கக்கூடிய அழுக்குகள் எளிதில் நீங்கும். அது மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் உள் உறுப்புகள் சிறப்பாக செயல்பட இது உறுதுணையாக இருக்கும்.
எண்ணெய் குளியல் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை இந்த எண்ணெய் கொடுப்பதால் உங்கள் தோல் வறட்சி இல்லாமல் பார்ப்பதற்கு பளபளப்பாக மாறிவிடும்.
oil bathமேலும் உடலில் ஏற்படக்கூடிய அபரிமிதமான உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சி அடைய இந்த எண்ணெய் குளியல் மிகவும் அவசியமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் இது உடலையும், உள்ளத்தையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நமக்கு உதவி செய்கிறது.
நீங்கள் இந்த எண்ணெய்க்குளியலை மேற்கொள்ள வேண்டும் எனில் காலை ஐந்து மணிக்கு முன்போ அல்லது மாலை 5 மணிக்கு பின்போ எண்ணெயை தேய்த்து குளிக்க கூடாது.
oil bathஇந்தக் கோடையில் ஏற்படும் வேனல் கட்டி, கொப்பளங்கள், வேர்க்குரு போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்க எண்ணெய் குளியல் அவசியமானது. எண்ணெய் குளியல் முடிந்த பின் உங்கள் சுறுசுறுப்பு சற்று குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும்.
எண்ணெய் குளியல்களுக்கு உகந்த எண்ணெய்களாக நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் உள்ளது. இந்த மூன்று எண்ணெய்களையும் பயன்படுத்தி மாதத்தில் மூன்று முறை நீங்கள் எண்ணெய் தேய்த்து குளித்துப் பாருங்கள். உங்களுக்குள் ஏற்படும் மாற்றம் உங்களுக்கு புலப்படும்.