“உங்க முக அழகுக்கு தேங்காய் எண்ணெய் போதும்..!” – எதுக்கு ரசாயனம் கலந்த கிரீம்?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அப்படிப்பட்ட முகத்தை நீங்கள் பளிச்சென்று வைத்துக் கொண்டால் அது பலரையும் சுண்டி இழுக்கும் விதத்தில் இருக்கும். இந்த முக அழகுக்கு நீங்கள் கண்ட கண்ட ரசாயன கலவைகளை கலந்த கிரீம்களை பயன்படுத்துவதை விட்டுவிட்டு தேங்காய் எண்ணெய் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்.

 நீங்கள் தேவதையைப் போல இயற்கையான முறையில் ஜொலிக்கலாம். இதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் உங்களுக்கு ஏற்படாது.

coconut oil

மேலும் உங்கள் முக அழகை அதிகப்படுத்த இயற்கை சார்ந்த பொருளான இந்த தேங்காய் எண்ணெயை எந்தெந்த வழிகளில் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முக அழகு மெருகேறும் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

முக அழகை தரும் தேங்காய் எண்ணெய்

உதட்டில் ஏற்படக்கூடிய வெடிப்புகள் நீங்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இதன் மூலம் உதட்டில் ஏற்படக்கூடிய வெடிப்பு எளிதாக நீங்கும். எந்த விதமான பக்க விளைவுகளும் இதனால் உங்களுக்கு ஏற்படாது.

உங்கள் கார் கூந்தல் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் இந்த தேங்காய் எண்ணெயை தினமும் காலை மற்றும் இரவு உறங்குவதற்கு முன்பு உங்கள் தலைகளின் வேர்க்கால்களில் படும்படி நன்கு மசாஜ் செய்து தேய்த்து வந்தால் கூந்தல் வளர்த்தி அதிகமாகும்.

coconut oil

சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சை தடுக்க சன் ஸ்கிரீனாக  நீங்கள் இந்த தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.

மேலும் கண்களுக்கு அடியில் இருக்கக்கூடிய கருவளையத்தை போக்க தேங்காய் எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து விட வேண்டும். இதனைத் தொடர்ந்து நீங்கள் செய்வதின் மூலம் கருவளையத்தை எளிதில் நீக்க முடியும்.

coconut oil

நீங்கள் போடுகின்ற மேக்கப்பை அகற்ற இந்த தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். வறண்ட சருமங்களுக்கு ஈரப்பதத்தை அளிக்க உங்கள் கைகள் மற்றும் முழங்கால் பகுதிகளில் தடவி வர சரும வறட்சியை நீங்கும்.

உடலில் இருக்கக்கூடிய இறந்த செல்களை வெளியேற்ற மசாஜ் ஆயிலாக கூட எந்த தேங்காய் எண்ணெயை நீங்கள் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் அழகு மேலும் அழகாகும்.

இத்தகைய பாரம்பரிய சிறப்புமிக்க தேங்காய் எண்ணெயை நீங்களும் பயன்படுத்தி நன்மைகளை பெற முயற்சி செய்யுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam