இன்று பொதுவாகவே அனைவரும் தங்கள் வீட்டில் மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டங்களை அமைத்து அதில் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வளர்த்து வருகிறார்கள். அப்படி வளர்ப்பவர்கள் தக்காளி செடி- யை அவர்கள் வீட்டு தோட்டத்தில் கட்டாயம் வளர்ப்பார்கள்.
அந்த தக்காளி செடியில் அதிகளவு தக்காளி பழங்கள் கிடைக்க என்ன செய்யலாம்.மேலும் தக்காளி செடியை எப்படி பராமரிப்பது மூலம் நமக்கு பழங்கள் அதிக அளவு கிடைக்கும் என்பதை எந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தக்காளி உங்கள் வீட்டில் இருந்தால் அந்த தக்காளியை வெட்டி அதில் இருக்கக்கூடிய விதைகளை எடுத்து ஒரு மண் தொட்டியில் போட்டு சிறிதளவு நீரை தெளித்து விடுங்கள் .
சில நாட்களில் இது செடிகளாக வளரும். பிறகு அந்த செடிகள் எடுத்து தனியாக ஒவ்வொரு செடியாக ஒவ்வொரு தொட்டி அல்லது மண்ணிலோ குறிப்பிட்ட இடைவெளியை விட்டு நடவு செய்வதின் மூலம் தக்காளி செடி பெரிதாக வளரும்.
Tomato plantதக்காளி செடி உங்கள் தோட்டத்தில் வளர்க்கும் போது போதிய அளவு சூரிய ஒளி மற்றும் நிழல் இவை இரண்டும் இருப்பது அவசியமானதாகும். மேலும் தக்காளி செடிகளுக்கு கரிம உரங்களை கொடுப்பதன் மூலம் மிக நல்ல ஆரோக்கியமான தக்காளி செடிகள் வளரும்.
தினமும் தக்காளி செடிகளுக்கு காலை மற்றும் மாலை இரண்டு நேரங்களிலும் நீரூற்றுவது அவசியமானது. தக்காளி செடி பூ பூக்க துவங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே இதற்கு தேவையான ஊட்ட ஊட்டச்சத்துக்களை கொடுப்பது மிகவும் அவசியம். பூத்து விட்டால் நீங்கள் செடிகளுக்கு சிறிய குச்சிகளை நட்டு கட்டி விடுவதின் மூலம் காய்க்கும் சமயத்தில் செடி முறிந்து விடாமல் பாதுகாக்கலாம்.
Tomato plantபூச்சிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேப்பனையோடு ஒரு லிட்டர் தண்ணீரை கலந்து ஆரம்ப நாட்களிலேயே உங்கள் செடிகளின் மீது தெளித்து விடுவதின் மூலம் பூச்சிகளால் எந்த விதமான பாதிப்பும் தக்காளி செடிக்கு ஏற்படாமல் அதிக அளவு தக்காளி பழங்களை கொடுக்கும்.
மிகக்குரிய எந்த குறிப்புக்களை நீங்கள் கடைப்பிடித்து வந்தால் கட்டாயம் உங்கள் வீட்டில் இருக்கும் தக்காளி செடியின் அதிக அளவு பழங்களை நீங்கள் பெற முடியும்.