அடேங்கப்பா..!! மாசத்துக்கு ஒரு காரு..! – மிருணாளினி ரவி வாங்கிய புது காரின் போட்டோஸ்..!!

நடிகை மிருணாளினி ரவி ( Mirnalini Ravi ) இவர் டப்ஸ்மாஷ் எனப்படும் சோசியல் மீடியா மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டி ஆவார். இவர் சாதாரண சராசரி மக்களை போன்று டிக் டாக்கில் அதிக ஆர்வம் கொண்ட ஒரு இளைஞியாக தனது ஆரம்ப வாழ்க்கையை தொடங்கினார். பிறகு இதன் மூலம் மக்களிடையே பிரபலமானதை தொடர்ந்து நிறைய திரைப்படங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/mirnaliniravi/

நடிகை மிர்ணலினி ரவி இவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவர் மே மாதம் பத்தாம் தேதி 1996 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது ஆரம்ப காலங்களில் நிறைய பள்ளி நிகழ்ச்சிகளில் நாடகங்களிலும் கலை நிகழ்ச்சிகளில் நடித்து தனது நடிப்பின் திறமையை வெளிக்காட்டி வந்தார். பிறகு கல்லூரி நாட்களிலும் தனது திறமையை வெளிக்காட்டி வந்த மிர்ணலினி ரவி அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது டிக் டாக் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் பிரபலமானார்.

Image Source : instagram.com/mirnaliniravi/

இதனிடையே இவருக்கு பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. இவர் 2019 ஆம் ஆண்டு ‘சூப்பர் டீலக்ஸ்’ எனும் திரைப்படத்தில் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்ததனால் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/mirnaliniravi/

பிறகு தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ‘கட்டல கொண்ட கணேஷ்’ எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றியானதை தொடர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். மேலும் தமிழில் சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ ,கோப்ரா போன்ற அடுத்தடுத்து நிறைய படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/mirnaliniravi/

இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்துவரும் மிர்ணலினி ரவி தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களுக்கு இன்ப விருந்து அளித்து வருகிறார். இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் புதிதான தனது காருடன் ஒரு செல்பி எடுத்து போட்டோவை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்களில் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பினை அதிகரித்தும் வருகிறார் மிர்ணலினி ரவி.

Image Source : instagram.com/mirnaliniravi/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கைக்கு அழைத்த நடிகர் நடிகைகள்.. கண்ணீர் சிந்தும் ஷகிலா..

அட்ஜஸ்ட்மென்ட் என்ற விஷயம் தற்போது பற்றி எரிந்து வருகின்ற வேளையில் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தால் நீங்கள் செல்வீர்களா? என்ற கேள்வியை தொகுப்பாளர் …