ஜவ்வரிசி வடை:கோடை விடுமுறை விடக் கூடிய வேளையிலே வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு விதவிதமான தின்பண்டங்களை தாயார் செய்து கொடுப்பதின் மூலம் எண்ணற்ற பயன்கள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் பிள்ளைகளோடு சேர்ந்து மனமகிழ்ச்சியோடு இருக்க முடியும்.
மேலும் கடைகளுக்குச் சென்று அந்தப் பொருட்களை வாங்கிக் கொடுப்பதை விட வீட்டில் இருந்து அந்த பண்டங்களை நீங்கள் செய்து கொடுப்பதால் ஆரோக்கியம் மேம்படுவதோடு பண விரயமும் தடுக்கப்படும்.
அந்த வகையில் இன்றைய சமையல் பதிவில் நீங்கள் எளிமையான ஜவ்வரிசி வடையை எப்படி செய்து அசத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
ஜவ்வரிசி வடை செய்ய தேவையான பொருட்கள்
1.100 கிராம் ஜவ்வரிசி
2.பெரிய வெங்காயம் பொடி பொடியாக நறுக்கியது ஒன்று
3.50 கிராம் கடலை மாவு
4.பச்சை மிளகாய்
5.கருவேப்பிலை ஒரு கைப்பிடி
6.கொத்தமல்லி ஒரு கைப்பிடி
7.சோம்பு ஒரு டீஸ்பூன் 8.பட்டை சிறிதளவு
9.உப்பு தேவையான அளவு
10.பொரித்து எடுக்க எண்ணெய்
javvarisi vadaiசெய்முறை
முதலில் ஜவ்வரிசியை நன்கு கழுவி சுடுநீரில் போட்டு ஒரு நாள் முழுவதும் ஊற போட்டு விட வேண்டும். பிறகு மறுநாள் நீங்கள் எந்த ஜவ்வரிசி மற்றும் பட்டையை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து நீங்கள் பொடியாக வெட்டி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை இதனோடு சேர்த்து கலக்கி விடுங்கள். பின்னர் இதற்கு தேவையான அளவு உப்பு,சோம்பினை போட்டுவிட்டு இதனோடு கருவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை சேர்த்து நன்கு பிணைய வேண்டும்.
javvarisi vadaiமேலும் பிணையும் போது சிறிதளவு நீரை தெளித்துக் கொண்டு எடுத்து வைத்திருக்கும் கடலை மாவையும் சேர்த்து நன்கு பிசைந்து வடை பதத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி வைக்கவும். எனண்ணெய் நன்கு சூடான பிறகு வட்ட வடிவத்தில் வடையை தட்டி போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும். இப்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கிரிஸ்பியான ஜவ்வரிசி வடை ரெடி.
javvarisi vadaiநீங்களும் கண்டிப்பாக இந்த ஜவ்வரிசி வடையை உங்கள் வீட்டில் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவைத்துப் பார்த்து சுவை எப்படி உள்ளது என்பதை பற்றி எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.