“ரோஸ் வாட்டர் இருந்தா போதும்..!” – உங்களை நீங்க அழகாக மாற்ற..!

ரோஸ் வாட்டர் : பார்க்கும்போதே உங்கள் சருமம் ரோஜா பூவை போல பளபளப்பாக மென்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் இனிமேல் ரசாயன கலவைகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். அதற்கு மாற்றாக நீங்கள் இயற்கை சார்ந்த அழகு பொருட்களை உங்கள் வீட்டிலேயே பயன்படுத்தி உங்கள் அழகை கிளியோபாட்ரா லெவலுக்கு மாற்றி விடலாம்.

Rose water

அதற்காக நீங்கள் ரோஸ் வாட்டரை பயன்படுத்தி எப்படி பூப்போல மாறலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

 அழகுக் கலையின் ரோஸ் வாட்டர்

உங்களை அழகாக மாற்றக்கூடிய இந்த ரோஸ் வாட்டரை நீங்கள் எத்தனை முறை பயன்படுத்தினாலும் எந்தவிதமான பாதிப்புகளையும் உங்கள் சருமத்திற்கு ஏற்படுத்தாத ரோஸ் வாட்டரை நீங்கள் ஒரு சிறந்த கிளன்சராகவும், டோனராகவும், மாய்ஸ்ரைசராகவும் பயன்படுத்தலாம்.

Rose water

அதற்காக இந்த ரோஸ் வாட்டரை உங்கள் வீட்டிலேயே நீங்கள் தயாரிக்க முடியும். இதற்காக நீங்கள் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து விடுங்கள். பிறகு இந்த தண்ணீரில் நான்கு கைப்பிடி அளவு பன்னீர் ரோஜா இதழ்களை போட்டு மூடி விட வேண்டும்.

இது நன்கு கொதித்து முடித்தவுடன் அடுப்பை ஆப் செய்து ஆற விட வேண்டும். பிறகு இதில் இருக்கக்கூடிய ரோஜா இதழ்களை உங்கள் கைகளால் பிழிந்து விட்டு பிறகு ஒரு வடிகட்டியை கொண்டு வடிகட்டி விடுங்கள். இதனை அடுத்து இதில் சிறிதளவு பாதாம் ஆயில், வைட்டமின் இ ஆயில் சேர்த்து விட்டால் போதும் உங்களுக்கு சூப்பரான ரோஸ் வாட்டர் தயார். இதை அப்படியே நீங்கள் உங்கள் பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொண்டு தேவையான சமயத்தில் பயன்படுத்தலாம்.

உங்கள் முகத்தில் இருக்கும் சருமத்துளை அடைப்புக்களை நீக்கி சருமத்தில் இருக்கும் மாசுகளை குறைக்க இந்த நீரினை கொண்டு நீங்கள் உங்கள் முகத்தை சுத்தப்படுத்துவது மூலம் நல்ல ரிசல்ட்டை கிடைக்கும்.

Rose water

மேலும் பஞ்சில் இந்த ரோஸ் வாட்டரை தொட்டு உங்கள் முகம், கை போன்றவற்றில் தடவி சில மணி நேரம் அப்படியே உலர விட்டு விடுங்கள். இது உலர்ந்த பிறகு மீண்டும் ஒருமுறை இதே போல் ஸ்பிரே செய்து மசாஜ் செய்யவும்.

இதனை அடுத்து ஈரமான பஞ்சு கொண்டு உங்கள் முகம் மற்றும் கைகளில் துடைத்து விடுங்கள். இதுபோல இரண்டு அல்லது மூன்று முறை செய்வதின் மூலம் உங்கள் சருமம் புத்துணர்வோட இருக்கும்.

முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருப்பவர்கள் இந்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தை கழுவுவதோடு, ரோஸ் வாட்டர்ரோடு இரண்டு துண்டு கற்பூரத்தை சேர்த்து முகத்தை துடைத்து வந்தால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுபிசுப்பு மறையும்.

டோனராக உங்கள் சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றால் எந்த ரோஸ் வாட்டர் உடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து உங்கள் முகத்தில் இந்த நீரினை பூசி இரவு நேரத்தில் பயன்படுத்துங்கள்.மேலும் உறங்குவதற்கு முன்பு இதுபோல் பூசி விட்டு மறுநாள் நீங்கள் உங்கள் முகத்தை சுத்தப்படுத்துவதின் மூலம் மிகச் சிறந்த டோனராக இது பயன்படும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam