தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் சாந்தினி தமிழரசன் ( Chandini Tamilarasan ) இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு நடித்த சித்து பிளஸ் 2 படத்தில்தான், சாந்தினி அறிமுகமானார்.
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சாந்தினி, வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னையில்தான் என்பதால், பக்காவான தமிழ் பொண்ணு இவர். கடந்த 2004ல், நந்தா என்பவரை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார்.
இவரது அப்பா தமிழரசன், அம்மா பத்மாஞ்சலி. சாந்தினி, தனது 17 வயதில், சென்னையில் நடந்த மிஸ் சென்னை அழகிப்போட்டியில், கலந்துகொண்டு மூன்றாமிடம் பெற்றவர்.
2009 ல் நடந்த தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் சாந்தினி பங்கேற்றார். அதை பார்த்து, இயக்குநர் பாக்யராஜிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆடிஷனில் பங்கேற்று, தனது நடிப்புத்திறமையை நிரூபித்தார்.
Chandini Tamilarasanஅதன்பின், சாந்தனு ஜோடியாக சித்து பிளஸ் 2 படத்தில் நடித்தார். டிசம்பர் 2010ல் வந்த இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை, ரசிகர்களின் மத்தியில் பெறவில்லை. அடுத்து படித்துறை என்ற படத்தில் சாந்தினி நடித்தார். அந்தப்படம் வெளிவரவே இல்லை.
ஆனால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு சாந்தினிக்கு அமைந்தது. அந்த வகையில் கவன், வஞ்சகர் உலகம், கண்ணுல காசை காட்டப்பா, ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, என்னோடு விளையாடு, காதல் முன்னேற்றக் கழகம், மை டியர் லிசா, வில் அம்பு, பில்லா பாண்டி, மன்னர் வகையறா, பலூன், நையப்புடை உள்ளிட்ட பல படங்களில் சாந்தினி தமிழரசன் நடித்திருக்கிறார்.
ஆனால், அழகான இந்த தமிழ் பொண்ணுக்கு பட வாய்ப்புகள் நிறைய கிடைத்தும், முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வர முடியவில்லை. பல படங்களில் நடித்தும், பெரிய அளவில் இவர் பேசப்படாதது, துரதிஷ்டமே.
Chandini Tamilarasanஎனினும் தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வந்த சாந்தினி, பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்ததால், டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போதும், நல்ல நடிகைகளில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
சாந்தினி, திறமையான நடிகை என்பது மட்டுமின்றி, கிளாமர் ரோல்களில் அவர் அதிகமாக நடித்திருக்கிறார். அவரது, கவர்ச்சியான அழகில் ரசிகர்கள் சொக்கிப்போய் கிடப்பதால், தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான படங்களை அடிக்கடி அப்டேட் செய்து விடுகிறார் சாந்தினி.
Chandini Tamilarasanஅதுவும் தற்போது லேட்டஸ்ட் ஆக ஸீ த்ரு புடவையில், அவர் பிரா அணிந்திருப்பதை அப்படியே காட்டும் இந்த புகைப்படங்கள் இப்போது, செம வைரலாகி வருகின்றன. பட வாய்ப்புகளுக்காக எல்லை தாண்டிய கவர்ச்சிக்கு, சாந்தினியும் தயாராகி விட்டாரா, என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு, அந்த புகைப்படங்கள் இப்போது டிரெண்டாகி வருகின்றன.
Chandini Tamilarasanசோஷியல் மீடியாவில் இருக்கும் சாந்தினி போன்ற நடிகைகளுக்கு நடிக்கும் நேரம் போக, மீதி நேரங்களில் சோஷியல் மீடியாவிலேயே பொழுதைக் கழிக்கின்றனர். அந்த நேரங்களிலும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக, பலவிதமான கிளாமர் போஸ்களில் புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களின் வெப்பக்காற்றில் குளிர் காய்கின்றனர்.
Chandini Tamilarasanநீங்களும், சாந்தினியின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து ரசியுங்கள்…மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.