சோனியா அகர்வால்,(Sonia Aggarwal) சமீபத்தில்தான் தனது நண்பர்களுடன், பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். அந்த படங்கள், சமூக வலைதளங்களில் வைரலானது. இப்போது, லேட்டஸ்ட் அப்டேட் ஆக அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்களும் மனதை சுண்டி இழுக்கின்றன. இதனால், சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா என, ரசிகர்கள் பலரும் அவருக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில், சிறந்த நடிகை என பெயர் பெற்றவர் சோனியா அகர்வால். இவரது முதல் படம், காதல் கொண்டேன், தனுஷ் ஜோடியாக சோனியா நடித்திருந்தார். இரண்டாவது படம் 7ஜி ரெயின்போ காலனி. வடநாட்டுப் பெண்ணாக, ரெயின்போ காலனியில் உள்ள அபார்ட்மெண்டில் குடியேறும் ரவிகிருஷ்ணா காதலிப்பார். இந்த படத்தில் டீன் ஏஜ் வயதினரின் குறும்பு, கவலைகளை அழகாக பதிவு செய்திருப்பார் படத்தின் இயக்குநர் செல்வராகவன். இந்த படத்தில், சோனியா அகர்வால் கேரக்டர் பேசப்படும் அளவுக்கு சிறப்பாக இருந்தது.
புதுப்பேட்டை, மதுர, கோவில், திருட்டுப்பயலே, ஒரு நடிகையின் கதை, சதுரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நிலையில், இயக்குநர் செல்வராகவன், சோனியா அகர்வால் இடையே காதல் ஏற்பட்டு, இருவரும் கடந்த 2006 ம் ஆண்டில், திருமணம் செய்துகொண்டனர். ஆனால், சில ஆண்டுகளில் திருமண வாழ்க்கை கசந்துபோய், கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து விட்டனர்.
நடிகர் தனுஷ்சின் உடன்பிறந்த சகோதரர் செல்வராகவன், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு வந்த பீஸ்ட் படத்தில் இவர் நடித்திருந்தார். சமீபத்தில் வந்த பகாசுரன் படத்திலும் செல்வராகவன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணன் செல்வராகவனை போலவே, தம்பி தனுஷூம், தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஐ பிரிந்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.
Sonia Aggarwalசெல்வராகவனை பிரிந்த பின், மீண்டும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விவேக் ஜோடியாக, பாலக்காட்டு மாதவன் படத்தில் நடித்திருந்தார். தற்போது வெளியான பஹிரா படத்திலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சோனியா அகர்வால், சினிமா வாய்ப்புகள் குறைந்த காலகட்டத்தில் டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். குயின், நாணல், மல்லி, அச்சம் தவிர் உள்ளிட்ட சீரியல்களில் இவரது கேரக்டர் சிறப்பாக இருந்ததால்,ரசிகர்களிடையே பரவலாக கவனிக்கப்பட்டு, பாராட்டை பெற்றது.
Sonia Aggarwalஇதுதவிர, வெப் சீரிஸ்களிலும் சோனியா அகர்வால் நடிக்கிறார். சமீபத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மகன் எஸ்.பி.பி., சரண் உடன் நடித்திருந்தார். இதில் கதைக்காக, இருவரும் கணவன் மனைவி போல் காட்சியளித்த ஒரு புகைப்படத்தை, எஸ்.பி.பி சரணும், சோனியா அகர்வாலும் திருமணம் செய்துகொண்டதாக சிலர் வதந்தி பரப்பிவிட, அது வைரலானது குறிப்பிடத்தக்கது.
Sonia Aggarwal40 வயதுகளை கடந்துள்ள சோனியா அகர்வால், இரு தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். இப்போது, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் சோனியா. மீண்டும் தமிழ் சினிமாவில் அண்ணி, அக்கா கேரக்டர்களில் நடித்தால் கூட, ரசித்து பார்க்கலாமே என்பதுதான் ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது.
மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.