நடிகை மாளவிகா (Actress Malavika) சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக பலரது இரவுநேர தூக்கத்தை கெடுத்தவர். இன்றும் பலரது கனவுகளில் வரும் அளவுக்கு, அழகான நாயகியாக இருக்கிறார். உதட்டு சுழிப்பில் ரசிகர்களை உசுப்பேற்றுபவர். இவர் நடித்த படங்களில், இன்னும் கூட, இவரது கிளாமரை ரசிக்க, ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மாளவிகாவின் இயற்பெயர் ஸ்வேதா கோனூர். சினிமாவுக்காக மாளவிகா என மாறினார். இவர் மாடலிங் துறையில் இருந்தவர். எண்ட் லவ்லீ மாடல் ஆக, இருந்திருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் பல படங்களில் மாளவிகா நடித்திருக்கிறார். கவர்ச்சியில், அம்மணி ரசிகர்களை கதறடித்தவர். எந்தவிதமான கவர்ச்சி காட்சியிலும் சலிக்காமல் நடித்துவிடுவார்.
தமிழில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், உன்னைத்தேடி படத்தில்தான் அறிமுகமானார். முதல் படத்திலேயே அல்டிமேட் ஸ்டார் நடிகர் அஜித் குமாருடன் நடிக்கும் நல்ல வாய்ப்பு, கிடைத்தது. படமும் வெற்றி பெற்றதால் மாளவிகா, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அடுத்து, சூர்யா நடித்த பேரழகன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும், மாளவிகா நடித்தார். இதுவும், நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல், டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி என்ற படத்தில், ‘வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ பாடலில் நடனடமாடி அனைவரையும் கவர்ந்தார்.
Actress Malavikaஅடுத்து, கமல் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கதாநாயகி சிநேகாவியின் தோழியாக, மாளவிகா நடித்திருந்தார். ரோஜாவனம் படத்தில், கார்த்திக் ஜோடியாக நடித்தார். இயக்குநர் சேரன் இயக்கத்தில் வெற்றிக்கொடி கட்டு படத்தில், முரளிக்கு ஜோடி இவர்தான். ‘கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு’, பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக பேசப்பட்டார்.
அடுத்து ரஜினிகா்ந்த் நடித்த சந்திரமுகி படத்திலும், இவருக்கு நல்ல கேரக்டர் கிடைத்தது, வியாபாரி, திருமகன் படங்களிலும் நடித்திருந்தார். மாளவிகா நடிப்பில் திருட்டுபயலே படம், அதிக கவனத்தை ஈர்த்த படம். அடுத்து, சீ யூ எட் 9 என்ற பாலிவுட் படத்திலும் அவர் நடித்திருந்தார்.
Actress Malavikaநடிகை மாளவிகா, அழகான நடிகையாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். சில படங்களில், அபாரமான கவர்ச்சி காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சில படங்களில், சில காட்சிகளில் மட்டுமே வந்து போனாலும், மாளவிகாவின் ரசிகர்கள் அவர் நடித்த அந்த சில காட்சிகளுக்காகவே படம் பார்க்க வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Actress Malavikaசினிமாவில், தன் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்ட மாளவிகா, கடந்த 2007ம் ஆண்டில் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார், இப்போது கோல்மால் என்ற படத்தில் அவர் நடித்து வருவதாக தகவல் உள்ளது. மாளவிகா – சுமேஷ் மேனன் தம்பதிக்கு ஆரவ் என்ற மகனும், ஆன்யா என்ற மகளும் உள்ளனர்.
சமீபத்தில் மாளவிகா தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலானது.
Actress Malavikaஇப்போது, பிளாக் கலரில் முண்டா பனியன் மட்டுமே அணிந்து, மேக்கப் எதுவுமின்றி தனது குளோசப் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருக்கிறார் மாளவிகா. 40 வயதுகளை கடந்து, பழைய இளமை, அழகு, கவர்ச்சி மாறாமல் இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து அசந்துபோன ரசிகர்கள், லைக்குகளை குவித்து வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.