” மறக்காம கிவி பழம் சாப்பிடுங்க..!” – ஆரோக்கியமான நன்மைகள பெறுங்க..!

பல வகையான பழங்களை சாப்பிட்டு இருக்கும் நமக்கு வெளிநாட்டு பழமான கிவி பழம் பற்றிய ஆரோக்கியமான நன்மைகள் பற்றி அவ்வளவாக தெரியாது.

எனவே கிவி பழத்தை நீங்கள் வாங்கி சாப்பிடுவதின் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், அதில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

Kiwi fruit

கிவி பழத்தைப் பொறுத்தவரை இதில் வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் இ, ஃபோலேட், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவு இருப்பதால் பலவிதமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவி செய்கிறது.

உடலுக்கு ஏற்படுகின்ற அலர்ஜிகளை எதிர்க்கக் கூடிய பண்புகள் கிவி பழத்தில் அதிகமாக இருப்பதால் உடலில் ஏற்படும் அலர்ஜிகளை இது தடுக்க உதவி செய்யும்.

Kiwi fruit

உடலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருப்பவர்கள், இந்த படத்தை உட்கொள்வதின் மூலம் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல் நல்ல கொலஸ்ட்ராலை உடலில் அதிகரிக்க கூடிய தன்மை இந்த கிவி பழத்திற்கு உள்ளது.

மேலும் கிவி பழத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகம் இருப்பதின் காரணத்தால் நோய் தொற்றை குறைக்க உதவி செய்வதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவு நமக்குத் தருகிறது.

Kiwi fruit

மலச்சிக்கல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தினமும் கிவி பழத்தை உட்கொள்வதின் மூலம் செரிமானத்தை அதிகப்படுத்தி மலச்சிக்கல் இருந்து விடுதலை கிடைக்கிறது. இதற்கு காரணம் இந்த பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.

உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கிவி பழத்தை சாப்பிடுவதின் மூலம் ரத்த அழுத்தத்தை சமன் செய்ய அதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் இதர தாது பொருட்கள் பயன்படுகிறது.

Kiwi fruit

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று டயட்டில் இருப்பவர்கள் குறைந்த அளவு கொழுப்புச்சத்து மற்றும் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ள கிவி பழத்தை சாப்பிடுவதின் மூலம் மிக எளிதில் உடல் எடையை குறைத்துக் கொள்ளலாம்.

இது  பெண்களுக்கு ஏற்படக்கூடிய எலும்பு தேய்மான பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருப்பதோடு மட்டுமல்லாமல் எலும்புகளை உறுதியாக கூடிய பணிகளை செய்ய உதவி செய்கிறது. இதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோயிலிருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.

மேற்கூறிய நன்மைகளை புரிந்து கொண்டிருக்கும் நீங்கள் கிவி பழம் கிடைத்தால் கட்டாயம் வாங்கி சாப்பிடுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam