“பெண்கள் அன்றாட வாழ்வில் அவசியம்..!” – கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்..!

ஆன்மீக குறிப்புகள்: பெண்கள் வீட்டின் கண்கள் என்று அனைவராலும் போற்றப்படக் கூடியவர்கள் பெண் ஒரு வீட்டில் நல்ல முறையில் பிரார்த்தனை செய்வதின் மூலம் அந்த குடும்பத்திற்கே நல்ல நல்ல பலன்கள் ஏற்படும் என்று கூறுவார்கள்.

அந்த வகையில் பூஜை செய்யக்கூடிய விஷயத்தில் பெண்கள் கவனக்குறைவாக இல்லாமல் கூடுதல் கவனத்தோடு அனைத்தையும் கடைபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவ்வாறு அவர்கள் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்களுக்கு ஐஸ்வரியம் அதிகரிக்கும்.

Spiritual tips

மேலும் தினமும் பெண்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகளைப் பற்றி எந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அதிகாலை எழுந்ததுமே வாசலை பெருக்கி கோலம் இடுவது அவசியமான ஒன்றாகும். அதற்காக நீங்கள் அரிசி மாவில் கோலம் போடுவது உங்களுக்கு செல்வ செழிப்பை ஏற்படுத்தும். சூரியன் வருவதற்கு முன்பே நீங்கள் கோலமிட்டு சூரியனை வரவேற்பது கூடுதல் சிறப்புகளை உங்களுக்கு கொடுக்கும். கோலம் போடும்போது நீங்கள் தெற்கு பார்த்து நின்று கோலம் போடாதீர்கள்.

Spiritual tips

கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண்கள் உக்கிரமாக இருக்கும் பெண் தேவதைகள் நிறலந்த கோயில்களுக்கு செல்வதை தவிர்த்தல் நல்லது. மேலும் அந்த சமயத்தில் நீங்கள் விரதம் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

கோயில்களில் பிரசாதமாக தரும் பொருட்களை நீங்கள் கோயில்களில் சிந்திய வண்ணம் சாப்பிடுவது மிகவும் தவறானது. எனவே இனி கோவில்களில் நீங்கள் பிரசாதத்தை பெற்றால் அதை சிந்தாமல் சாப்பிட்டு உரிய இடத்தில் போடுவது நல்லது.

வீட்டில் உணவில் சமைக்க துவங்கும் போது அன்னபூரணியை வேண்டி நீங்கள் சமைத்தால் கட்டாயம் உணவின் சுவை கூடும். மேலும் ஆன்மீக மந்திரங்களை உங்கள் வீட்டில் எப்போதும் ஒலிக்க விடுவதின் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

Spiritual tips

குடும்பத்தில் இருக்கக்கூடிய பெரியவர்கள் எப்போதும் வீட்டில் நல்ல வார்த்தைகளை பேசுவதின் மூலம் நல்ல விஷயங்கள் அதிகமாக நடக்கும். எனவே எத்தகைய தருணத்திலும் தீய வார்த்தைகளை உங்கள் வாயால் பேசுவதை தவிர்த்து விடுங்கள்.

மேற்கூறிய இந்த ஆன்மீக குறிப்புகளை நீங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றும் போது நிச்சயமாக உச்ச நிலைமைக்கு நீங்கள் வருவீர்கள் உங்கள் வீடும் செல்வ செழிப்போடு விளங்கும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam