இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2023 புதன்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2023 புதன்கிழமை. நடப்பவை எல்லாம் விதி என்று எண்ணாமல் நமது திறந்த ஜாதகத்தை கணித்து அதில் எந்தெந்த கிரகங்கள் எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தக்க பரிகாரங்களை செய்து வருவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் கட்டாயம் மாற்றங்கள் ஏற்படும்.

உங்கள் ஜாதகத்தில் கூறப்பட்டிருக்கும் கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உங்கள் செயல்கள் எதுவாக இருந்தாலும் அதை திட்டமிடுதல் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும். மேலும் உங்களுக்கு ஏற்படும் அசுப பலன்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று உங்கள் ஆற்றலை உணரக்கூடிய நாள் என்பதால் நீங்கள் உங்கள் இலக்குகளை நிர்ணயித்து முயற்சி செய்தால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை சவால்கள் அதிகமாக இருக்கும். சற்று கவனத்தோடு நீங்கள் நம்பிக்கையோடு பணியாற்றுவதின் மூலம் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பணியில் கவனம் செலுத்துவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களுக்கு பண உதவி அதிக அளவு கிடைக்கும் பங்கு வர்த்தகத்தின் மூலம் பணம் சேரக்கூடிய வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. எனினும் சிக்கனமாக இருப்பது உங்களது பணத்தை சேமிக்க உதவிகரமாக இருக்கும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியமாகும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று நீங்கள் பொறுமையோடு எதையும் கையாள வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்வதின் மூலம் மனதுக்கு நன்மை ஏற்படும். எனவே உங்கள் மனதை லேசாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை செய்ய போராட வேண்டி இருக்கும். பணிசுமை அதிகரித்து காணப்படும். பணியில் தவறுகள் நேர வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் திட்டமிட்டு பணியை செய்யுங்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகமாக இருக்கும். பணம் குறைவாக கையில் இருப்பதால் செலவுகள் செய்வதை கடினமாக உணர்வீர்கள். சிக்கனமாக செலவு செய்ய முயற்சி செய்து பாருங்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் உடல் நலத்திற்காக பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி தரும். எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று நீங்கள் போராட்டங்களை அதிகளவு சந்திக்க வேண்டி இருக்கும்.மேலும் பொறுமையாக இருப்பது அவசியமாகும்.நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை மும்மரமாக பணிகளை செய்வீர்கள். அதிக அளவு முயற்சி எடுத்து பணிகளை செய்ய வேண்டும். எனவே தொழிலில் கவனத்தை செலுத்துவது சிறப்பாக இருக்கும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணத்தட்டுப்பாடு அதிகளவு காணப்படும். பணத்தை செலவு செய்ய வேண்டிய கட்டாயமான சூழ்நிலைகள் உருவாகும். எனவே சிக்கனமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று ஆரோக்கிய பாதிப்புகள் இருக்கும். கை கால்களில் வலி ஏற்படலாம். உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று வீட்டில் நடக்கவிருக்கும் விசேஷங்களை தள்ளிப் போடுவது நல்லது. விழிப்புணர்வுடன் இருப்பதின் மூலம் நீங்கள் எதையும் பாதுகாக்க முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் அனுகூலமான சூழ்நிலைகள் காணப்படும். கடினமான பணிகளை எளிதாக செய்து முடிக்கும் ஆற்றல் உங்களிடைய இருப்பதால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

நிதி நிலைமையை பொருத்தவரை பண இழப்புக்கான வாய்ப்புகள் உள்ளதால் பணத்தை செட்டும் ,சிக்கனமாகவும் செலவு செய்வது அவசியம் . எதிலும் ஜாக்கிரதையாக இருக்கவும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எண்ணெய் சம்பந்தமான உணவுகளை நீங்கள் உட்கொள்ள வேண்டாம்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே இன்று அனுகூலமான நாளாக உங்களுக்கு அமைந்திருக்கும். சிறிய அளவில் முயற்சிகள் செய்வதின் மூலம் உங்கள் பணிகளை விரைவாக முடிக்கலாம். புதிய முதலீடுகள் செய்வதின் மூலம் லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கையை அதிகரிக்க கூடிய நாளாக இந்த நாள் விளங்கும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் திறமைகளுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரைவாகவும், விரும்பியும் செய்வீர்கள். எனவே தொழிலில் ஆரோக்கியமான முன்னேற்றம் உள்ளது.

நிதி நிலைமையை பொறுத்தவரை அதிகளவு பணம் காணப்படும் குடும்ப வளர்ச்சிக்காக பணத்தை செலவிட திட்டமிடுவீர்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறப்பான நாள் என்று கூறலாம் சிறந்த ஆற்றலோடு இன்று இருப்பீர்கள் எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் அற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று பொதுவாக மகிழ்ச்சி நிறைந்த நாளாக உள்ளது. புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள உகந்த நாளாக இருக்கும்ஜ வெளியிடங்கள் மற்றும் விருந்துக்கு செல்வது உங்களுக்கு மன மகிழ்ச்சியை தரும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை திறமையோடு கையாளும் தன்மை உங்களுடைய அதிகரித்து இருக்கும். எனினும் தவறுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் சற்று கவனமாக எதையும் கையாள வேண்டும். அறிவு பூர்வமாக செயல்படுவதின் மூலம் வெற்றிகளை வாரிக் குவிக்கலாம்.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று உங்களது பணத்தை சிறந்த முறையில் பராமரிப்பீர்கள்.மேலும் பங்கு வர்த்தகத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்து பல மடங்காக உயர்த்துவீர்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை உடற்பயிற்சியின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை திறமாக வைத்துக் கொள்ள முடியும். பிரார்த்தனை தியானங்களில் ஈடுபடுவதின் மூலம் உங்களுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே என்று எதிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சூடான விவாதங்களுக்கு வாய்ப்பை கொடுக்காதீர்கள். அக்கம் பக்கத்தோடு கவனத்தோடு பழகுங்கள். மேலும் பேசுவதற்கு முன் என்ன பேசுகிறோம் என்பதை ஒரு முறைக்கு இருமுறை யோசித்து பேசுங்கள்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று பணிகளில் சிறப்பான நிலை இருக்காது. பணிசுமை அதிகரித்து காணப்படும். உங்கள் சக பணியாளர்களிடமிருந்து உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்காது.

நிதி நிலைமையை பொறுத்தவரை தேவையற்ற செலவுகள் அதிகரித்து காணப்படும். அவற்றை தவிர்க்க முயற்சி செய்வது நல்லது.மேலும் பணத்தை முதலீடு செய்ய என்ன செய்யலாம் என்பதை பற்றி யோசிக்கவும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை அதிகளவு யோசனையை செய்வதால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தியானப் பயிற்சியை மேற்கொள்வதின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று பலன்கள் கலந்து காணப்படும்.நீங்கள் பொறுமையாக இருந்துதான் எதையும் நாம் சாதிக்க முடியும். சமயோகித புத்தியோடு செயல்படுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை கடின உழைப்பு உங்களுக்கு நன்மைகளைப் பெற்றுத் தரும். சிறந்த அணுகுமுறையின் மூலம் பணிகளில் நிறைய சாதிப்பீர்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. அதிக பணம் சம்பாதிப்பது கடினமாக இருக்கும். எனவே சிக்கனத்தை கையாளுவது அவசியமாகும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை பதட்டம் காரணமாகவும் அமைதியின்மை காரணமாகவும் உங்கள் ஆரோக்கியத்தில் சீர்கேடுகள் ஏற்படும். தொடை மற்றும் கை கால்களில் வலி ஏற்பட பாதிப்பு உள்ளதால் எதையும் அமைதியோடு சந்திப்பது நல்லது.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்கும். புதிய மனிதர்கள் மற்றும் நபர்களின் மூலம் உங்களுக்கு நன்மை தரக்கூடிய தொடர்புகள் கிடைக்கும். இதன் மூலம் புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள். நீங்கள் ஆற்றிய பணிக்காக மேலதிகாரிகளின் அங்கீகாரத்தை பெறக்கூடிய வாய்ப்பு இன்று அதிகளவு உள்ளது.

நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களிடம் பணம் அதிகமாக இருக்கும்.மேலும் வெளியிடங்களுக்குச் செல்ல நீங்கள் திட்டமிடலாம். பணத்தை சுற்றுலா செல்வதற்கு செலவிடுவீர்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று பெரிய அளவிலான ஆரோக்கிய பிரச்சனைகள் இல்லை. இன்று நீங்கள் ஆற்றலோடு இருப்பதால் ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்றைய நாள் சமூகமான நாளாக உங்களுக்கு இருக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள். உங்களின் வளர்ச்சியில் நல்ல நிலை ஏற்படும். அமைதியோடு முக்கிய முடிவுகளை எடுங்கள்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிசுமை அதிகமாக இருக்கும்.நீஇ கவனமாக எல்லோரிடமும் பழகுவது அவசியமாகும் பணியில் கவனத்தை செலுத்துங்கள்.

நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் சீராக இருக்கும். நிதி வளர்ச்சி மேம்படுவதால் உங்கள் செயல் திறன் அதிகரிக்கும் முக்கியமான விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்து நிதியை சேமிக்க முயற்சி செய்யவும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை வேலை அதிகமாக இருப்பதின் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, இன்று நாள் சீராக இருக்கும் நீங்கள் எதையும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது உங்கள் வளர்ச்சிக்கு உதவி செய்யும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் திருப்தி காண முடியாது. தவறுகள் நேர வாய்ப்புகள் உள்ளது. எனவே மிகவும் கவனமாக இருத்தல் அவசியமாகும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை வளர்ச்சி சுமாராகவே இருக்கிறது. பணத்தை சிறிய வழியில் நீங்கள் சிக்கனமாக சேமிக்க முயற்சி செய்தாலும் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி தரும். எனவே குறிப்பிட்ட தேவைகளை அறிந்து செலவுகளை செய்யவும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை சுமாரான நாளாக உள்ளது. ஒவ்வாமை காரணமாக இருமல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால் நீங்கள் கவனத்தோடு இருப்பது அவசியமாகும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே இன்று உங்கள் முடிவுகளை செயலாற்றுவதில் நேர்மையாக இருக்க வேண்டும். மனதில் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். உங்கள் செயல்களை கவனமாக திட்டமிட்டு செய்ய முயற்சி செய்யுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை மிகுந்த முயற்சி உடன் பணியாற்ற வேண்டும். வீட்டு பிரச்சனைகள் பணியை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண பற்றாக்குறை காணப்படும். சிறிய அளவிலான கடன் வாங்கக்கூடிய நிலைகள் உள்ளது. எனவே பணத்தை சிக்கனமான முறையில் செலவு செய்ய முயற்சி செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சுமாராகவே இருக்கும் சளி மற்றும் இருமல் காரணமாக அசௌவுரியங்கள் ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …