பெரியவர்கள் முன் மட்டுமல்ல, எப்போதுமே கால் மேல் கால் போட்டு உட்காருவது தவறு. இதனால் குடும்பத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என்று நமது முன்னோர்கள் படித்துப் படித்து சொல்லி இருக்கிறார்கள்.
எனினும் நாம் படித்த புத்திசாலிகள் என்பதால் அதையெல்லாம் நம் காதுகளில் போட்டுக் கொள்ளாமல் ஸ்டெலிஸ் பொசிஷன் என்று எண்ணி கால் மேல் கால் போட்டு உட்காருவதின் மூலம் என்னென்ன தீமை நமது உடலுக்கு ஏற்படுகிறது என்பதை பற்றி விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் போது உங்கள் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து நரம்புகளில் அழுத்தம் அதிகமாகும். இது ரத்த அழுத்த பிரச்சனைக்கு வித்திடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே கால் மேல் கால் போட்டு உட்காராமல் இருந்தால் பிபி பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமருவதின் மூலம் உங்களுக்கு வாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.மேலும் இது சில சமயங்கள் இது உங்கள் நரம்புகளில் பலவீனத்தை ஏற்படுத்தி விடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
cross leg sittingஇது மட்டுமல்லாமல் கால் மேல் கால் போட்டு அமருபவர்களுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் அளவு அதிகமாகி விடுவதால் உடலில் எதிர்மறையான பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படும்.
கால் மேல் கால் போட்டு அமருவதின் மூலம் இடுப்பின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால் இடுப்பு சம்பந்தமான பிரச்சனைகள் மட்டும் அல்லாமல் கால் முட்டிகளிலும் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் முதுகு வலி இதன் மூலம் அதிகமாக ஏற்படும் எனவே கால் மேல் கால் போட்டு அமர்வதை தவிர்த்து விடுங்கள்.
உடலை வளைத்து சீரற்ற அமைப்பில் நீங்கள் அமர்ந்து இருப்பதால் இது முதுகு தண்டுவடப் பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆண்கள் கால் மேல் கால் போட்டு அமரும்போது விதைப்பை பகுதியில் வெப்பம் அதிகரித்து விண்டணுக்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது.
cross leg sittingஎனவே நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமருவதை தவிர்த்து விடுங்கள் என்று பல டாக்டர்களும் இன்று அட்வைஸ் செய்கிறார்கள்.
எனவே இனியாவது நமது முன்னோர்கள் சொன்ன வார்த்தைகளில் ஏதோ ஒன்று கட்டாயம் இருக்கிறது என்று நம்பிக்கையோடு அதை பின்பற்றினால் உங்களுக்கு இத்தகைய சிக்கல்களும் சிரமங்களும் ஏற்படாது.