“எலுமிச்சை தோலை கொண்டு இப்படி எல்லாம் செய்யலாமா..!” – நீங்களும் முயற்சி செய்து பாருங்க..!

நமது வீடுகளில் பயன்படுத்தப்படும் எலுமிச்சை பழம் ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. இது விலை மலிவான பழம். அத்தோடு இந்த பழத்தை தேவ கனி என்றும் அழைப்பார்கள். இந்த பழத்தில் இருக்கும் சாறை மட்டுமே நாம் பயன்படுத்திவிட்டு தோலை அப்படியே தூர எறிந்து விடுவோம்.

இனிமேல் இதன் தோலை அப்படி தூர எறிந்து விடாமல் சில வேலைகளுக்காக நீங்கள் பயன்படுத்தும் போது எண்ணற்ற நன்மைகள் எளிதில் கிடைக்கும்.

lemon peel

அப்படி எலுமிச்சை பழ தோலை கொண்டு என்ன செய்யலாம் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சமையலறையில் நீங்கள் பூண்டு மற்றும் வெங்காயத்தை வெட்டும் போது உங்கள் கைகளில் ஆழ்ந்த அந்தப் பொருட்களின் வாசனை அப்படியே இருக்கும். என்ன தான் சோப்பு போட்டு நீங்கள் கைகளை கழுவினாலும் அந்த வாசனை விலகிச் செல்லாது.

lemon peel

 இதை நீங்கள் சரி செய்ய எலுமிச்சை தோல்களை உங்கள் விரல்கள் மற்றும் நகங்களில் நன்கு தேய்த்து அதன் பின் கழுவினால் அந்த வாசனை நீங்கி உங்கள் கைகளில் புதிய வாசனை தோன்றும்.

நீங்கள் துவைக்கும் துணிகளில் சாப்பாட்டு கறைகள் படிந்து விட்டால் அதை எளிதில் நீக்க இந்த எலுமிச்சம் தோலை நன்கு தேய்த்து அதன் பிறகு துணியை துவைத்து பாருங்கள். சாப்பாட்டு கறை இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும்.

மேலும் அதிக அளவு கொசு தொல்லையால் நீங்கள் அவதி படும் பொழுது இந்த எலுமிச்சை தோலை வெயிலில் உலர்த்தி மூலையில் வைத்து  எரித்து விட்டீர்கள் என்றால் அதிலிருந்து வரக்கூடிய புகையை நுகர முடியாமல் கொசுக்கள் வெளியே தங்கிவிடும். வீட்டுக்குள் வருவதற்கு அச்சப்படும்.

lemon peel

வீட்டில் இருக்கும் செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் பளபளப்பாக மாற எலுமிச்சை தோலை கொண்டு தேய்த்தால் போதுமானது. இந்தத் தோலில்  அந்த பாத்திரங்களை தேய்த்து விட்டு வெயிலில் சில மணி நேரங்கள் உலர்த்தி விடுவதன் மூலம் உலோகம் பிரகாசமாக புதிது போல் மாறிவிடும்.

எனவே இனிமேல் தப்பி தவறியும் கூட எலுமிச்சை தோலை அப்படியே தூரப் போடாமல் இதுபோல நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள். கட்டாயமாக இந்தக் குறிப்புகள் உங்களுக்கும் பயன்படும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …