தமிழில் சில படங்களில் நடித்தாலும், மிகவும் ரசிக்கப்பட்டவர் ஷெரின் ( Actress Sherin ) 25 ஆண்டுகளுக்கு முன், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், துள்ளுவதோ இளமை படத்தில் இவர் அறிமுகமானார். முதல் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தார். தனுஷூக்கும் இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மயக்கும் காந்த பார்வையால், முதல் படத்திலேயே ஷெரின் ரசிகர்களை, தன்வசப்படுத்தினார். முதல் படத்திலேயே கவர்ச்சியில், ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.. பாடல் காட்சிகளில், இவரும் தனுஷூம் மிகவும் நெருக்கமாக நடித்து, தூள் கிளப்பினர். படமும், டீன் ஏஜ் காதலை அடிப்படையாக கொண்டது. எனவே, படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்து, ரசிகர்களை குஷிப்படுத்தினர். முத்தக்காட்சிகளுக்கும் படத்தில், பஞ்சமே இல்லை,
அடுத்து சிபிராஜூடன் ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், யோகி, பூவா தலையா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவில், தமிழ் சினிமாவில் இவரால் வெற்றி பெற முடியவில்லை. அதனால், தொடர்ந்து அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை.சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த நண்பேன்டா படத்தில், சந்தானம் ஜோடியாக நடித்திருந்தார். முன்பிருந்ததை விட, வெயிட் அதிகரித்து, குண்டான உடல் வாகில் பெங்களூரு தக்காளி போல, காட்சியளித்தார்.
actress sherinஇதைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ஆனால், ஷெரினுக்கு அக்கா, அண்ணி வேடங்கள் கூட கிடைக்கவில்லை. ஏனெனில், இவரது மாடர்ன் தோற்றம், அதற்கு கை கொடுக்கவில்லை.
actress sherinஇந்நிலையில், டைரக்டர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில், ‘ரஜினி’ என்ற படத்தில், ஷெரின் கதாநாயகியாக நடிக்கிறார்.சமூகவலை தள பக்கத்தில், ஷெரின் மிக ஆக்டிவ்வாக இருக்கிறார். இதனால், இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் அதிகமாக அப்டேட் செய்யப்படுகிறது. கிளாமர் போஸ்களில், தனது புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களைஉற்சாகப்படுத்தி வருகிறார்.
actress sherinஇப்போது, உடல் எடையை குறைத்து புதிய மாடர்ன் டிரஸ்சில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை ஷெரின் அப்டேட் செய்திருக்கிறார். அதில், பொம்மை போன்ற அழகில், செக்கச் சிவந்த மேனியில், பளபளப்பான நிறத்தில் ஜொலிக்கும் அவரது அழகை பார்த்து, ரசிகர்கள் சொக்கிப் போய்விட்டனர்.அம்மணி, இந்த அளவுக்கு இளமையை மீட்டு எடுப்பார் என, நினைத்துக்கூட பார்க்கவில்லை. இனி சினிமாவில் அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மீண்டும் இனி ஹீரோயினாகவே நடிக்கலாம்.
actress sherinஅந்த அளவுக்கு டீன் ஏஜ் பெண் போல காட்சி தருகிறீர்கள் என, கமெண்ட்டில் ரசிகர்கள் புகழாரம் பாடி வருகின்றனர். ஷெரின், இயல்பிலேயே நல்ல நிறம் கொண்டவர். அவரது வாளிப்பான உடல்வாகும், முகவெட்டும், சிரிப்பும், மயக்கும் கண்களும் இப்போது எடை குறைந்து அவரது ஸ்லிம் ஆன தோற்றமும், இளமைக்கால ஷெரினை திருப்பிக்கொண்டு வந்தது போல்தான், இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களில் காணப்படுகிறார்.
actress sherinஅதனால், நிச்சயம் அவர் நடித்த ரஜினி படம் ரிலீஸ் ஆன பிறகு, தமிழ் சினிமாவில் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.