“நரை முடி விரைவில் வராமல் இருக்க..! – இந்த இயற்கை வழிகளை ஃபாலோ பண்ணுங்க..!

தற்போது உணவு முறையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள், நம்மைச் சுற்றி இருக்கும் சுற்றுச்சூழல் மாசுபாடுகள், வயது முதிர்வு, உடலில் ஹார்மோன்களால் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் இவற்றின் காரணமாக விரைவில் நமது கருமையான முடி, நரை முடி வெள்ளை நிறத்திற்கு மாறிவிடுகிறது.

Black hair

அப்படி நரைமுடி விரைவில் ஏற்படக்கூடியவர்கள் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விரைவில் வெள்ளை முடி வருதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அதற்காக நீங்கள் தினமும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாக பார்க்கலாம்.

Black hair

தினமும் நீங்கள் சாப்பிடும் உணவோடு ஒரு மலை நெல்லிக்காய் சாப்பிடுவதை வழக்கமாகிக் கொண்டால் உங்களுக்கு வெள்ளை முடி ஏற்படாது. அப்படி வெள்ளை முடி இருப்பவர்கள் சாப்பிடும் போது அந்த வெள்ளை முடி குறைவதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது.

வீட்டில் சமையல் செய்யும் போது அரிசியை கழிந்து அதன் பிறகு தான் உலை வைப்பார்கள். அப்படி கழுவிய அரிசி நீரை நீங்கள் இரண்டு நாள் புளிக்க வைத்து விட்டு அந்த நீரை எடுத்து உங்கள் தலைமுடியில் தடவி குடிப்பதின் மூலம் வெள்ளை முடி ஏற்படாமல் தடுக்கலாம்.

Black hair

கடுகு எண்ணெயை உங்கள் தலைமுடியில் தடவி விடுவதின் மூலம் வெள்ளை முடியின் ஆதிக்கத்தை தடுக்க முடியும். மேலும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை கடுகு எண்ணெயை உங்கள் தலைக்கு தேய்த்து வாருங்கள்.

வெங்காயச்சாறு எடுத்து அதை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலைக்கு தேய்ப்பதின் மூலம் வெள்ளை முடியை தடுப்பதோடு மட்டுமின்றி உச்சந்தலையில் ஏற்படக்கூடிய தொற்றுக்களையும் நீங்கள் தடுத்து விட முடியும்.

Black hair

பாதாம் பருப்பை முதல் நாள் ஊற வைத்துவிட்டு மறுநாள் நன்கு அரைத்து அதன் பாலை மட்டும் எடுத்து உங்கள் தலைமுடிக்கு தேய்த்து விடுங்கள். பிறகு சில மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்வதின் மூலம் நீங்கள் வெள்ளை நிற முடி உங்களுக்கு ஏற்படாமல் தடுத்து விடலாம்.

உணவோடு ஊட்டச்சத்து மிக்க சமச்சீரான உணவை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வைட்டமின் பி, தாமிரசத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதின் மூலம் நரை பிரச்சனைக்கு நீங்கள் விடை கொடுக்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …