கீரை வளர்ப்பு:காய்கறிகளை விட கீரை வகைகளில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் தினமும் ஒரு கைப்பிடி அளவாவது கீரையை எடுத்துக் கொள்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
ஒரு மனிதனின் வாழ்நாள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவு ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்க கூடிய எந்த கீரையை எளிதில் உங்கள் வீட்டு மாடி தோட்டத்தில் எப்படி வளர்த்து பயன்படலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதற்காக நீங்கள் கீரை விதைகளை வாங்கி வந்து நீங்கள் வைத்திருக்கும் தொட்டியில் தூவி விடுங்கள் தூவி விட்ட பிறகு சிறிதளவு நீரை தெளித்து விட வேண்டும் இப்படி தொடர்ந்து நீங்கள் 10 நாட்கள் நீரை தெளித்து விடுவதின் மூலம் துளிர்விட்டு கீரை முளைக்கும்.
அப்படி முளைத்த கீரைகளை நீங்கள் தனித்தனியாக எடுத்து மற்றொரு தொட்டியில் நட்டு வளர்க்கலாம் அல்லது அப்படியே வளர்க்கவும் செய்யலாம்.
keerai valarpuகீரை வளர்ப்பில் முக்கியமாக நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியது என்னவென்றால் இந்த கீரைகளை வளர்க்க பெரிய அளவு வெயில் தேவையில்லை. எனவே வெய்யில் இல்லாத பகுதிகளிலும் நீங்கள் எந்த கீரையை பயிர் செய்ய முடியும் குறிப்பாக நீங்கள் அரைக்கீரை முளைக்கீரை சிறுகீரை போன்றவற்றை சுலபமான முறையில் வளர்த்து விடலாம்.
கீரை வளரும்போது அதற்கு 50% நீங்கள் தேங்காய் நார் உரமும் மண்புழு உரமும் போட்டு வளர்க்கலாம். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டு சமையல் அறையில் இருந்து கிடைக்கும் காய்கறி கழிவுகளை கூட மக்க விட்டு அதை போடலாம்.
keerai valarpuஇப்படி செய்தாலே உங்கள் வீட்டு கீரைகள் கொழுகொழுவென்று வளர்ந்துவிடும் கீரைகளில் பூச்சிகள் ஏதும் ஏற்படாமல் இருக்க நீங்கள் வேப்ப எண்ணெய் சிறிதளவு எடுத்து அதை தண்ணீரில் கலந்து தெளித்து விடலாம்.
வார நீங்கள் பயிர் செய்யும் கீரையை மூன்று முதல் நான்கு முறை நீங்கள் அறுவடை செய்து பயன்படுத்தலாம் அதன் பிறகு நீங்கள் கீரையை வேரோடு எடுத்து பயன்படுத்திவிட்டு மீண்டும் கீரை விதைகளை நீங்கள் போட்டு வளர்க்கலாம்.எனவே இந்த முறையில் பயன்படுத்தி நீங்கள் கீரையை உங்கள் வீட்டு தோட்டத்தில் பயிரிட்டு பயன் பெறுங்கள்.