வணக்கம் வந்துட்டேன்… இன்ஸ்டாகிராமில் மீண்டும் வந்த சாய் தன்சிகா

தன்சிகா என்ற பெயர் கொண்ட நடிகையான இவர், சாய் தன்சிகா ( Sai Dhanshika)என சமீபத்தில் பெயர் மாற்றம் செய்திருக்கிறார். கபாலி படத்தில், ரஜினி மகள் யோகியாக நடித்தவர் என்றால், சட்டென பலருக்கும் நினைவுக்கு வந்துவிடுவார். ஏனெனில், அந்த படத்தில் கபாலி அதாவது ரஜினியின் மகளாக மட்டுமின்றி, அதிரடி சண்டை காட்சிகளில் ஆக்ஷன் ஹீரோயினியாகவும் அசத்தி இருப்பார்.

கடந்த 2009ம் ஆண்டில், இயக்குநர் ஜெகநாதன் இயக்கத்தில் வெளியான பேராண்மை படத்தில் தன்சிகா அறிமுகம் ஆனார். கல்லூரி மாணவியரில் ஐந்துபேரில் ஒருவராக இருப்பார். என்சிசி மாணவியாக, மலைப்பகுதி காட்டுக்குள் தோழியருடன் சென்று, வெளிநாட்டு தீவிரவாதிகளை அழிக்க, ஹீரோ ஜெயம்ரவிக்கு உதவியாக இருப்பார். முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டார்.தன்சிகா, தமிழ்நாட்டுப் பொண்ணு. தஞ்சாவூரைச் சேர்ந்தவர். தாய்மொழி தமிழ் என்பதால், தமிழ் சினிமாவில் தமிழில் பேசும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

Sai Dhanshika

பேராண்மை படத்தை தொடர்ந்து அரவான், பரதேசி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். அரவான் படத்தில் குற்றப்பரம்பரையாக வாழும் இன மக்களில், மரண தண்டனை விதிக்கப்பட்ட காதலனை கரம்பிடிக்க ஆசைப்படுவார். நல்ல கேரக்டரில் அந்த படம் இவருக்கு அமைந்தது. அதேபோல், இயக்குநர் பாலா இயக்கத்தில், தேயிலை தோட்டத்து அடிமைத் தொழிலாளியாக தன்சிகா அற்புதமான நடிப்பை தந்திருப்பார். ஒட்டுப்பொறுக்கி கேரக்டரில் நாயன்மாரே என கூவும் படத்தின் நாயகன் அதர்வாவுக்கு ஆதரவு காட்டுவார். பரதேசி படத்திலும் தன்சிகா கேரக்டர் கவனிக்கப்பட்டது.

Sai Dhanshika

அடுத்து, 2016ம் ஆண்டில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில், தன்சிகா, சிறந்த கேரக்டரில் நடித்திருந்தார். ரஜினியின் மகளாக யோகி கேரக்டரில் தன்சிகா வாழ்ந்திருந்தார். துப்பாக்கி சுடும் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் வில்லாக பறந்து, மடிந்து, புரண்டு ஆக்ரோஷமான நடிப்பை தன்சிகா வெளிப்படுத்தி இருந்தார். பலரது பாராட்டையும் பெற்றார்.தற்போது, 33 வயது கடந்த நிலையிலும் தொடர்ந்து மாடலிங் துறையிலும், சினிமாவிலும் தன் பயணத்தை தொடர்கிறார் தன்சிகா.

Sai Dhanshika

திருடி, மனதோடு மழைக்காலம், மாஞ்சா வேலு, நில்கவனி செல்லாதே, யாயா போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள தன்சிகா, மலையாளம், தெலுங்கு என பிறமொழி படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடனமாடுவது, நீண்ட தூரம் பயணம் செல்வது, புத்தகங்கள் வாசிப்பது தன்சிகாவுக்கு மிகவும் பிடித்த விஷயங்களாக இருக்கின்றன.
வணக்கம் வந்துட்டேன் என்ற கேப்சனுடன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை, தன்சிகா அப்டேட் செய்திருக்கிறார். கவர்ச்சியான அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பல நாட்களாக பார்க்கவில்லையே, என்ற ஏக்கத்தை கமெண்ட்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.

Sai Dhanshika

சினிமா நடிகைகளை பொருத்தவரை, தங்களது அன்றாட நிகழ்வுகளை, குறிப்பாக புதிய ஆடைகளில், கவர்ச்சியான ஆடைகளில் எடுக்கப்படும் தங்களது புகைப்படங்களை அப்டேட் செய்யும் போட்டோ கேலரியாக இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்கள் மாறிவிட்டன. இதை நடிகர்களை காட்டிலும் நடிகைகளே நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

Sai Dhanshika

அதுபோல், நடிகர்களை காட்டிலும் நடிகைககளின் இந்த சமூகவலை தளப்பக்கங்களை பின்தொடரும் பாலோயர்ஸ்சும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். அந்த வகையில், தன்சிகாவை 536 கே, பாலோயர்ஸ் ஆக தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பிகினியில் அத தடவி.. முழு உடம்பை காட்ட.. புருஷனைத் தவிர எல்லோரும் படுக்க… பச்சை பச்சையாய் பேசுவேன்..

மாலதி என்ற ஒரு பெண் நடிகை ஒரு திரைப்படம், ஒரு சீரியல், ஒரு குறும்படம் என  ஒன்றில் மட்டும் தான்  …