அஞ்சலி (Anjali) தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நடிகை. 2007 ம் ஆண்டில் கற்றது தமிழ் படத்தில் அஞ்சலி அறிமுகம் ஆனார். அதன் பின், அங்காடித்தெரு படத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் அஞ்சலி நடித்து வருகிறார். மாடலிங் துறையில் இருந்ததால், அஞ்சலி நிறைய விளம்பர படங்களில், நடித்திருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் அறிமுகமான அஞ்சலியின் முதல் படம் போட்டோ, த்ரில்லர் படமான இது, 2006ல் வெளியானது. இயக்குநர் ராம் இயக்கத்தில், ஜீவா உடன் நடித்த கற்றது தமிழ், அஞ்சலிக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுத் தந்தது. அடுத்து வசந்தபாலன் இயக்கத்தில் அங்காடித்தெரு மற்றும் எங்கேயும் எப்போதும் படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அஞ்சலிக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது. அங்காடித்தெரு படத்தில் நடித்த வகையில், தமிழக அரசின் சிறந்த நடிகை விருதும் அஞ்சலிக்கு கிடைத்தது.
அங்காடித்தெரு படத்தில், ஜவுளிக்கடை ஒன்றில், பெண் விற்பனையாளராக நடித்திருந்த அஞ்சலியின் நடிப்பு, ஒவ்வொரு காட்சியிலும் பிரமாதமாக இருந்தது. குறும்பு செய்யும் பெண்ணாகவும், அதே வேளையின் நிர்வாக அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் அபலை பெண்ணாகவும், வறுமை, சோகம், காதல், உற்சாகம் என பலதரப்பட்ட உணர்வுகளையும் அற்புதமான நடிப்பை தந்திருப்பார் அஞ்சலி.
இதற்கு நேர்மாறாக, இயக்குநர் சரவணன் இயக்கத்தில் எங்கேயும் எப்போதும் படத்தில், நர்ஸ் ஆக பணிபுரியும் போலீஸ்காரர் மகளாக, துணிச்சல்மிக்க ஒரு பெண்ணாக நல்ல நடிப்பாற்றலை தந்திருப்பார். இந்த இரண்டு படங்களுமே, அஞ்சலிக்கு திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Anjaliஅஞ்சலி, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரசோல் பகுதியை சேர்ந்தவர். 37 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளார். பள்ளி படிப்பை ரசோலில் முடித்த அஞ்சலி, கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். கணிதத்தில், பட்டப்படிப்பு முடித்த அஞ்சலி, குறும்படங்ளில் நடிக்க ஆர்வம் காட்டினார். இது, சினிமாவில் அவர் நுழைய வாய்ப்பளித்தது. அதன்பிறகே, தமிழில் கற்றது தமிழ், அங்காடித்தெரு படங்களில் நடித்தார்.
Anjaliதமிழில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால், மீண்டும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அந்த வகையில் சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டு, பலுபு, மசாலா, கீதாஞ்சலி, டிக்டேக்கர் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார். இதில் சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டு, கீதாஞ்சலி படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நந்தி விருதுகளை வென்றார்.
Anjaliதொடர்ந்து தமிழில் சில படங்களில் அஞ்சலி நடித்தும், அந்த கேரக்டர்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. சிங்கம் 3 படத்தில், ஒரு ஐட்டம் பாட்டுக்கு அஞ்சலி ஆடினார்.
தமிழில் ஆயுதம் செய்வோம், தூங்கா நகரம், கருங்காலி, மங்காத்தா, தம்பி வெட்டேத்தி சுந்தரம், அரவான், கலகலப்பு, சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி, எனக்கு வாய்த்த அடிமைகள், தரமணி, நாடோடிகள் 2, பாவ கதைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தும், அஞ்சலிக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
அஞ்சலி திறமையான, அழகான நடிகையாக இருந்தும் ஒரு கட்டத்துக்கு பிறகு, அவரும் கவர்ச்சி நடிகையாக சினிமாவில் பயன்படுத்தப்பட்டார். அவரும் வாய்ப்புக்காக அந்த படங்களில் நடித்தார். மேலும், நடிகர் ஜெய் உடன் காதல் விவகாரத்தில் சிக்கிக்கொண்ட அஞ்சலி, நாளடைவில் சினிமாவில் போதிய ஆர்வம் காட்டாததும் அவருக்கு பின்னடைவை தந்தது.
Anjaliஎனினும், விட்ட இடத்தை பிடிப்பதற்காக பகீரத முயற்சியாக தொடர்ந்து, தனது கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். ஆனால், பழைய அழகில் குடும்பப்பாங்கான அழகில் அஞ்சலி இல்லை என்றாலும், கிளாமரில் இன்னும் அழகாகவே தெரிகிறார்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.