இயற்கை உரங்கள்: இன்று அனைவரது வீட்டிலும், வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் போன்றவற்றை அமைத்து பராமரித்து வருவதோடு அதில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதான சத்தான காய்களை கொண்டு சமையலை அசத்தி வருகிறோம்.
அந்த வகையில் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நீங்கள் பயிரிட்டு இருக்கும் காய்கறி செடிகள் அபரிமிதமான காய்கறி கொடுக்கவும், சத்தான காய்களாக இருக்கவும், அவற்றுக்கு நீங்கள் உரமிடுதல் மிகவும் அவசியம்.
குறிப்பாக இந்த உரம் இயற்கை சார்ந்த உரமாக இருந்தால் நஞ்சில்லாத காய்களை உங்கள் வீட்டிலேயே உற்பத்தி செய்து உங்கள் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
அந்த வகையில் உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு உகந்த உரமான காய்கறி கழிவு உரங்களை எப்படி உற்பத்தி செய்து பயன்படுத்துவது என்பதை பற்றி விரிவாக எந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ORGANIC FERTILIZERமேலும் இந்த காய்கறி கழிவுகளை உங்கள் வீட்டு சமையல் அறையில் நீங்கள் பயன்படுத்தும் காய்கறிகளில் இருந்தும், தூர எறியப்படும் மக்கும் பொருட்களைக் கொண்டே இயற்கை உரங்களாக மாற்றி விட முடியும்.
அதற்காக நீங்கள் உங்கள் தோட்டத்தில் ஒரு சிறிய குழியை தோண்டி வைத்து விடுங்கள். இந்த குழியில் நீங்கள் அன்றாடம் தூர எறியும் காய்கறி தோல்கள் மற்றும் மக்கக்கூடிய பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதை இதனோடு சேர்த்து விடுங்கள்.
ஒரு மாதத்திற்குப் பிறகு இதைத் தோண்டி எடுத்துப் பார்த்தால் மிகச் சிறந்த இயற்கை உரமாக மாறி இருக்கும். இதனை எடுத்து நீங்கள் வளர்த்து வரும் காய்கறி செடிகளுக்கு போடுவதின் மூலம் அவை ஆரோக்கியமாக வளர்ந்து உங்களுக்கு தேவையான காய்கறிகளை நஞ்சில்லாமல் கொடுக்கும்.
ORGANIC FERTILIZERஎனவே இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் எதையும் தூரப் போடாமல் மறு சுழற்சி முறையில் உங்கள் வீட்டு காய்கறி செடிகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் மகசூலை அதிகரித்து எளிய முறையில் பைசா செலவில்லாமல் நீங்கள் உரத்தை தயாரித்து உங்கள் செடிகளுக்கு போட முடியும்.
நீங்களும் இதை ஒரு முறையை முயற்சி செய்து பாருங்கள் கட்டாயம் பலன் உங்களுக்கு கிடைக்கும். அப்படி பலன் அடைந்தீர்கள் என்றால் எங்களோடு அது பற்றி நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.