யோகாவானது உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதோடு மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்தித் தரக்கூடிய அற்புத சக்தி படைத்தது.மேலும் இந்த யோகா கலையில் சலபாசனம் செய்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் பெண்களுக்கு கிடைக்கிறது.
இந்த யோகாவை செய்வது மிகவும் எளிமையானது தான். எனவே இந்த யோகாவை எப்படி செய்யலாம். அதன் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
சலபாசனம் செய்வதற்கு நீங்கள் குப்புற படுத்து உங்கள் கைகளை திறந்து உடலுக்கு அருகில் கொண்டு வந்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கன்னத்தை முன்னோக்கி சாய்த்து தாடையை தரையோடு ஒட்டி படுமாறி செய்யுங்கள்.
மேலும் கண்களை மூடிக்கொண்டு உங்களால் முடிந்தவரை கால்களை மேலே நோக்கி தூக்க முயற்சி செய்ய வேண்டும் இந்த முறையில் செய்வது தான் சலபாசனம்.
salabhasanaதினமும் இந்த ஆசனத்தை நீங்கள் செய்து வருவதன் மூலம் உங்கள் உடல் எடையை விரைவில் குறைத்து விடலாம்.எனவே உடல் இளைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஆசனம் ஒரு மிகச்சிறந்த ஆசனமாக இருக்கும்.
இது போலவே அடிவயிற்று கொழுப்பை குறைக்க எந்த ஆசனத்தை செய்வதின் மூலம் அடிவயிற்றில் இருக்கும் கொழுப்புகள் கரைந்து குறுகிய இடை விரைவில் உருவாகும்.
salabhasanaஉங்கள் தசைகளை வலிமைப்படுத்தவும் கை, கால், தொடைகள் மற்றும் கால் பகுதியில் இருக்கின்ற தசைகளை வலிமைப்படுத்த இந்த ஆசனத்தை தினமும் குறைந்தது அரை மணி நேரம் செய்தாலே போதும்.
முதுகு தண்டுவடத்தை வலுவாக்குவதோடு மட்டுமல்லாமல் முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற விரும்புபவர்கள். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வாருங்கள்.
salabhasanaசெரிமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து எளிதில் தீர்வினை பெறலாம்.
இந்த ஆசனத்தை காலையில் மலம் கழித்த பிறகு செய்வதின் மூலம் மிக எளிமையாக இருக்கும் ஆசனத்தை செய்யும் போது தளர்வான ஆடைகளை போட்டு செய்ய வேண்டும். புதிதாக இந்த ஆசனத்தை செய்பவர்கள் முதலில் மெதுவாக பயிற்சி செய்வது நல்லது.