“வாஸ்து சாஸ்திரப்படி வீட்டுத் தோட்டம்..!” – எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

வீட்டுத் தோட்டம்: இன்று நகர் பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகமாக வீட்டுத் தோட்டங்களை மாடிகளில் அமைத்து வருகிறார்கள். மேலும் இதுபோன்ற தோட்டத்தை அமைப்பதற்கு வாஸ்து சாஸ்திரத்தை பயன்படுத்தினால் அதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

எனவே வாஸ்துபடி அவர்கள் கூறியிருக்கும் குறிப்புகளை கொண்டு உங்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் தோட்டத்தை அமைக்க விரும்பினால் நீங்கள் இந்த குறிப்புக்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Home Garden

வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டு தோட்டத்தை நீங்கள் சரியாக அமைப்பதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் அதிகமாகும் அது மட்டுமல்லாமல் வீட்டில் மகிழ்ச்சியும் நிலவும்.

எனவே நீங்கள் வாஸ்துவை பயன்படுத்தி உங்கள் வீட்டுத் தோட்டத்தை வடக்கு மற்றும் கிழக்கு திசையில் அமைப்பது உசிதமாக கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த திசையில் தோட்டம் அமைத்தால் எப்போதும் வீட்டிற்கு தேவையான நேர்மறை ஆற்றல் அதிகரித்து உங்கள் மனதிலும் அது அப்படியே பிரதிபலிக்கும்.

Home Garden

வீட்டுக்கு தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் நீங்கள் தோட்டத்தை அமைப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதன் மூலம் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து உங்கள் மனநிலையில் பதக்கத்தை உருவாக்கும்.

உங்கள் தோட்டத்தில் துளசி செடியை நீங்கள் வைக்க விரும்பினால் வாஸ்து படி எந்த செடியை கிழக்கு திசையில் வைப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். மேலும் துளசியை வடக்கு பகுதியில் நட்டு வைத்தால் வீட்டுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

Home Garden

சிவப்பு நிற பூக்களை பூக்கக்கூடிய செடிகளை நீங்கள் தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் வைப்பது மூலம் அதிக அளவு நன்மைகள் கிடைக்கும். வடகிழக்கு பகுதியில் நீங்கள் சிறு செடிகள் மற்றும் புதர் போன்று வளரக்கூடிய செயல்களை செடிகளை வைக்கலாம்.

மேலே கூறப்பட்டிருக்கும் டிப்ஸை பயன்படுத்தி உங்கள் வீட்டு தோட்டத்திலும் அந்தந்த திசைகளில் அந்தந்த செடிகளை வைத்து வளர்த்துப் பாருங்கள். கட்டாயம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam