கண்ணாடிப் பொருட்கள்:இன்று பெரும்பாலான வீடுகளில் கண்ணாடி பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த பொருட்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும். எனவே நீங்கள் பயன்படுத்தும் இந்த கண்ணாடி பொருட்களை பளிச் என்று மின்ன வைக்க சில குறிப்புகளை பார்க்கலாம்.
கண்ணாடிப் பொருட்களை நீங்கள் கழுவிய பிறகு கடைசியாக கழுவும் நீரில் சிறிதளவு வினிகர் மற்றும் போரக்ஸ் பவுடர் கலந்து கழுவ வேண்டும். இவ்வாறு கழுவும் போது உங்களது கண்ணாடி பொருட்கள் பளிச் என்று மின்னும்.
கண்ணாடிப் பொருட்களை நீங்கள் கழுவும் போது உங்கள் கையில் இருக்கக்கூடிய மோதிரங்களை கழட்டி வைத்துவிட்டு கழுவுவது சிறப்பானதாகும். இதன் மூலம் அந்த கண்ணாடிப் பொருட்களில் கிறலோ, விரிசல்களோ ஏற்படுவதை தவிர்க்கலாம்.
உங்கள் ஷோகேசுகளில் நீங்கள் பீங்கான் தட்டுகளை அடுக்கி வைக்கும் போது கீழே விழாமல் இருக்க ராக்குகளின் அடியில் நீங்கள் துணியை விரித்துவிட்டு அதன் மேல் அடுக்கி வைக்கலாம்.
glass cleaningகண்ணாடி பொருட்களில் துர்நாற்றம் வீசினால் அதை சிறிதளவு வெண்ணீர் ஊற்றி வைத்து பிறகு கழுவி பாருங்கள் துர்நாற்றம் எளிதில் நீங்கிவிடும்.
பிளவர் வாஸ் போன்ற கண்ணாடியால் ஆன பொருட்களில் கறை படிந்து விட்டால் அதை நீக்குவதற்காக நீங்கள் வெள்ளை வினிகரை பயன்படுத்தலாம்.
glass cleaningமேலும் தற்போது சந்தைகளில் கிடைக்கக்கூடிய கோலினை பயன்படுத்தியும் நீங்கள் உங்கள் கண்ணாடி பாத்திரங்களை எளிதில் சுத்தப்படுத்தலாம்.
வாரம் ஒரு முறை உங்கள் கண்ணாடி பாத்திரங்களை துடைத்து வைப்பதின் மூலம் தூசி படியாமல் சுத்தப்படுத்துவது எளிமையாக இருக்கும்.
glass cleaningஎனவே மேற்கூறிய குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணாடி பொருட்களை பலபலவென்று நீங்கள் மாற்றிவிட இந்த முறைகளை பயன்படுத்தலாம்.