சாக்ஸில் வெங்காயம்: இரவு நேரம் உறங்கும்போது சிலர் சாக்ஸில் வெங்காயத்தை பாதத்தில் வைத்து படி உறங்குவார்கள். இவ்வாறு செய்வதின் மூலம் நமக்கு நன்மைகள் ஏற்படுகிறதா? தீமைகள் ஏற்படுகிறதா? என்ற சந்தேகம் பலருக்கும் நிலவி வருகிறது.
இந்த சந்தேகத்தை தீர்க்கக் கூடிய வகையில் வெங்காயத்தை சாக்ஸில் வைத்து உறங்குவதின் மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இரவு நேரத்தில் நீங்கள் சாக்ஸில் வெங்காயத்தை வைத்து உறங்கும்போது வெங்காயத்தில் இருக்கும் பாஸ்பாரிக் அமிலம், உடலில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் ரசாயனங்களை காலின் வழியாக உறிஞ்சி வெளியேற்றி விட உதவி செய்கிறது.
வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் சருமத்தின் வழியாக ஊடுருவி உங்கள் ரத்த நாளங்களை சுத்தப்படுத்துவதால் ரத்தம் சுத்தமாகும்.
மேலும் வெங்காயத்தில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்ட்டி வைரல் தன்மைகள் இருப்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய இந்த நுண்ணுயிரிகளை அழித்திட உதவி செய்கிறது.
onionமேலும் பாதத்திலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தை தடுக்க எந்த வெங்காயம் பெரும் அளவு பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சளி காய்ச்சல் போன்ற பாதிப்புக்களில் இருப்பவர்களுக்கு தூங்கும் போது உள்ளங்காலில் வெங்காயத்தை வைத்து தூங்குவதின் மூலம் சளி மற்றும் காய்ச்சல் குணமாகிறது.
சிறுகுடல் சிறுநீர்ப்பை பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், சாக்ஸில் வெங்காயத்தை வைத்து உறங்கும்போது குதிங்காலில் ஏற்படும் வெப்ப பிரச்சனை தணிந்து மற்ற பிரச்சனைகளும் சீராகிறது.
செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இதுபோல செய்வதின் மூலம் செரிமானம் அதிகரிக்கும். சிறுநீரகப் பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்க சாக்ஸில் வெங்காயம் வைத்து உறங்குவது நல்லது.
onionவெங்காயத்தை இரண்டாக வெட்டி அதை பாதத்தில் வைக்கலாம்.மேலும் இரவு முழுவதும் தூங்கி மறுநாள் காலை வரை அப்படியே விட்டு விடலாம் இதன் மூலம் உங்களுக்கு மேற்கூறிய நன்மைகள் கிடைக்கும்.
வெங்காயம் தானே என்று அசால்டாக நினைக்காமல் இதுபோல நீங்கள் பயன்படுத்தி எண்ணற்ற நன்மைகளைப் பெற முடியும் நீங்களும் ஒருமுறை பயன்படுத்திப்பாருங்கள் கட்டாயம் ஏற்படும் மாற்றம் உங்களை ஆச்சரியப்படுத்தும்.