“இனி மேல் புசுபுசு சாப்ட் சப்பாத்தி..!” – இப்படி செய்து பாருங்க..!

நம் வீடுகளில் செய்யக்கூடிய சப்பாத்தி செய்த உடனே சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதுவே  ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரங்கள் கடந்து விட்டால் அதை பிச்சு சாப்பிடுவது என்பது பெரும்பாடாகவே பலருக்கும் உள்ளது.

இந்த நிலையை மாற்றி உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் சப்பாத்தி ஹோட்டலில் இருப்பது போல லேயர் லேயராக இருக்கவும், சாட்டாக இருக்கவும் என்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாக பார்க்கலாம்.

soft chappathi

ஆரோக்கியமான இந்த சப்பாத்தியை இரவு நேரங்களில் நீங்கள் எடுத்துக் கொள்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் சப்பாத்தியை விரும்பி சாப்பிட பஞ்சு போல சப்பாத்தியை செய்ய நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் முறைகளை பின்பற்றினால் கட்டாயம் செய்ய முடியும்.

சப்பாத்தி சாப்பிட்டாக வர நீங்கள் சப்பாத்தியை பிசைவதற்கு மாவை போடும்போது, அந்த மாவில் ஒரு டீஸ்பூன் அளவு சர்க்கரையை சேர்த்து பிசைந்து விட்டால் சப்பாத்தி செம சாப்பிட்டாக இருக்கும் எளிதில் பிச்சு எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

soft chappathi

மேலும் நீங்கள் சப்பாத்திக்கு மாவு பிசையும் பொழுது அதில் ஒரு டீஸ்பூன் அளவு நெய்யை சேர்த்து பிசைந்து அப்படியே பத்து முதல் 15 நிமிடங்கள் ஊர விட்டு விடுங்கள். பிறகு  மாவை திரட்டி நன்கு அடித்து சுட்டு எடுத்தால் சப்பாத்தி சாப்டாக இருக்கும்.

சப்பாத்தி சாப்ட்டாக வர நீங்கள் வாழைப்பழத்தை மிக்ஸியில் நன்கு அரைத்து மாவில் சேர்த்து பிசைந்து செய்தால் சப்பாத்தி செம சாப்பிட்டாக வருவதோடு லேயர் லேயராகவும் கிடைக்க நீங்கள் இரண்டு, மூன்று முறை திருப்பிப் போட்டு தேய்க்க வேண்டும்.

சப்பாத்தி மாவு பிசையும் போது அதில் வெந்நீர் ஊற்றி பிசைவதன் மூலம் சப்பாத்தி இரண்டு நாட்கள் ஆனாலும் அப்படியே சாப்பிட்டாக இருக்கும். இந்த முறையை நீங்களும் உங்கள் வீட்டில் பயன்படுத்தி பாருங்கள்.

soft chappathi

சப்பாத்திக்கு மாவு பிசைந்த பிறகு இந்த மாவை ஈரத் துணியில் அரை மணி நேரம் அப்படியே ஊற விட வேண்டும் இப்படி விட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

எனவே மேற்கூறிய முறைகளை நீங்கள் பயன்படுத்தி உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்து பாருங்கள் கட்டாயம் அது சாப்ட்டா உள்ளது என்று பலரும் கூறுவார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam