என்னென்ன செய்தாலும் வீட்டில் தடைகள், தொழிலில் தடைகள் என தொட்டதெல்லாம் தடைகளாக வந்தால் அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு முனீஸ்வர வழிபாடு தான். முனீஸ்வர வழிபட்டு வருவதின் மூலம் உங்கள் தடைகளை தகர்த்தெறிந்து வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெற முடியும்.
இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிராமப்புற பகுதிகளில் முனீஸ்வரர் ஆலயங்கள் உள்ளது. இங்கு இருக்கும் ஆலயங்களில் முனீஸ்வரர் சிலை வடிவில் இல்லாமல் சிவலிங்கம் அல்லது உயரமான நடு கல் போன்ற தோற்றத்தில் இருப்பார்.
மேலும் முனீஸ்வரர் சிவபெருமானின் முதன்மை காவலர் என்று கூறுகிறார்கள். இவரின் ஜென்ம நட்சத்திரம் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரம் தான்.
பிறவியில் செய்த கர்ம வினைகளை அழிக்க நீங்கள் முனீஸ்வரரை வழிபட்டு வந்தாலே போதும். மனதார முனீஸ்வரரை நினைத்து அவர் கோயிலுக்கு சென்று படையல் போட்டு அவரை வணங்கி வர தடைகள் எல்லாம் தகர்ந்து போய் உங்களுக்கு நல்ல காலம் ஆரம்பிக்கும்.
Lord Muneeshwararஅந்த வகையில் மதுரைக்கு அருகில் இருக்க கூடிய மாட்டுத்தாவணியில் பாண்டி முனீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் உலகப் பிரசித்தி பெற்றது.
முனீஸ்வரர் பல பகுதிகளில் வழிபாடு செய்யப்படுகின்ற கடவுளாக இருக்கிறார். மேலும் இவருக்கு பல பெயர்கள் உள்ளது. அந்த வகையில் மகாமுனி, ராஜாமுனி, தர்ம முனி, விஜய முனி என்று இவர் அழைக்கப்படுகிறார்.
Lord Muneeshwararமுனீஸ்வரரை வழிபட ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரமான மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை வழிபாடு செய்வது நல்லது. இவருக்கு பிடித்த வஸ்துக்கலான புனுகு, சுருட்டு, ஜவ்வாது, மதுபானம் போன்றவற்றை படைத்து ஆடு கோழிகளை பலியிடுவது வழக்கம்.
பெண்களும் அவர்களது மன குறையை போக்க முனீஸ்வரரை வழிபடுவதன் மூலம் முக்கிய மாற்றங்கள் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும். எனவே கட்டாயம் பெண்களும் ஞாயிற்றுக்கிழமை முனீஸ்வரரை வழிபடலாம்.
எனவே நீங்களும் ஞாயிற்றுக்கிழமை அன்று முனீஸ்வரனை வழிபட்டு சகல விதமான வெற்றிகளையும் எளிதில் பெறுங்கள்.