ஐஸ்வர்யா லட்சுமி, (iswariya lakshmi) பிரபலமான நடிகையாக இருக்கிறார். மாடலிங் துறையில் பிஸியாக இருக்கும் இவர், மலையாள படங்களில் அதிகம் நடித்திருக்கிறார்.
தமிழிலும் முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.ஐஸ்வர்யா லட்சுமி, மருத்துவ படிப்பை முடித்த பிறகு 2014ம் ஆண்டில் மாடலிங் துறையில் ஐஸ்வர்யா லட்சுமி காலடி வைத்தார்.தொடர்ந்து, 2017 ம் ஆண்டில், ‘நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா’ என்ற மலையாளப் படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி அறிமுகம் ஆனார்.
ஐஸ்வர்யா லட்சுமி, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். இவர், 1991ம் ஆண்டில் பிறந்தார். பள்ளி படிப்பை தொடர்ந்து, எர்ணாகுளம் ஸ்ரீ நாராயணா மருத்துவ நிறுவனத்தில், தனது மருத்துவப் படிப்பை முடித்தார்.
நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா படத்தைத் தொடர்ந்து, 2017ம் ஆண்டில் மாயநதி படத்திலும், 2018ம் ஆண்டில், பகத்பாசில் உடன் வரதன் படத்திலும், அதையடுத்து, விஜய் சூப்பரும் பவுர்ணமியும் ஆகிய படங்களில் நடித்தார். 2019ம் ஆண்டில், தமிழில் ஐஸ்வர்யா லட்சுமி அறிமுகம் ஆனார். நடிகர் விஷால் நடித்த ஆக்ஷன் படம் மூலம் தமிழில் நடித்தார்.
iswariya lakshmiஐஸ்வர்யா லட்சுமி, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.‘நான் திட்டமிட்டு, நடிப்புத்துறைக்கு வரவில்லை.
ஆனால் மருத்துவப் படிப்பை முடித்தவுடன், குடும்ப நாடக படமான நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா என்ற படத்தில், முக்கிய கேரக்டரில் நடிக்க, இயக்குநர் அல்தாப் சலீம் அழைப்பு விடுத்தார். அடுத்து, ஆஷிக் அபு எழுதிய காதல் படமான மாயநதி படத்தில், முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த மாபெரும் ஹிட் படமாக வெற்றி பெற்று, பாராட்டுக்களை பெற்றது.
பகத் பாசில் உடன் இவர் நடித்த வரதன் படமும் மிகப்பெரிய ஹிட் ஆகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தமிழில் ஆக்சன் படத்தை தொடர்ந்து, தனுஷூடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்தார். இந்த படம், கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது. இந்த படம், தனுஷ் படங்களிலேயே மிக மோசமான தோல்விப்படமாக அமைந்தது.
iswariya lakshmiசிரிக்கும் புத்தா, காணேக்கானே, புத்தம்புது காலை விதியாதா, அர்ச்சனா 31 நாட் அவுட், கோட்சே, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், அம்மு, குமாரி, கட்டா குஸ்தி, கிறிஸ்டோபர் உள்ளிட்ட பல படங்களில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார்.
இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்த கட்டா குஸ்தி, பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குஸ்தி வீராங்கணையான இவர், அதை மறுத்து விஷாலை திருமணம் செய்து கொள்வதும், ஒரு கட்டத்தில் கணவரை காப்பாற்ற, அடியாட்களுடன் சண்டையிடுவதும் என, நல்ல நடிப்பை தந்திருப்பார்.
iswariya lakshmiமேலும், கல்கி எழுதிய சரித்திர நாவலான பொன்னியின் செல்வன், மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டில் வெளிவந்தது. இதில், ஓடம் ஓட்டும் பூங்குழலி கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.
முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், வரும் 28 ம் தேதி பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளிவர இருக்கிறது. இதிலும், இவரது கேரக்டர் சிறப்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, புரமோஷன் பணிக்காக, முக்கிய நகரங்களுக்கு நட்சத்திர நடிகர்கள் குழுவுடன் பயணம் மேற்கொண்டு, ரசிகர்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.
iswariya lakshmiஏசியாநெட் விருது, பிலிம்பேர் விருது, சைமா விருது கேரள திரைப்பட விமர்சர்கள் சங்க விருதுகள் வனிதா திரைப்பட விருதுகள் என அம்மணி பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர், அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.