நிவேதா பெத்துராஜ், (Nivetha Pethuraj) தமிழ் சினிமாவில் அசத்தலான நடிப்பாற்றல் மிக்க ஒரு அழகான நடிகை. தமிழில் சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் மனதில், நல்ல பெயர் பெற்றிருக்கிறார். நிவேதா தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் இவர் அறிமுகமான முதல் படம், ஒருநாள் கூத்து. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் ஒரு படமாக இருந்தது. இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹீரோவாக நடித்திருந்தார்.
Nivetha Pethurajநிவேதா பெத்துராஜ், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெத்துராஜ், இதையே தனது பெயரின் பின்னால் வைத்துள்ளார் நிவேதா. இவருக்கு நிஷாந்த் என்ற தம்பி இருக்கிறார். சிறு வயதிலேயே துபாய் சென்றுவிட்ட நிவேதா, துபாயிலேயே பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து இருக்கிறார். அதற்கு பின்புதான், தமிழ் நாட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நிவேதா பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிருபுடிச்சவன், சங்கத் தமிழன், பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த படங்களில் ஜெயம் ரவியுடன் நடித்த டிக் டிக் டிக் மற்றும் விஜய் ஆண்டனி உடன் நடித்த திமிரு புடிச்சவன் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. மற்ற படங்கள், எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.
Nivetha Pethurajதிமிரு புடிச்சவன் படத்தில், பெண் எஸ்ஐ ஆக, நிவேதா பெத்துராஜ், ஸ்டைலாக நடித்திருப்பார். காக்கி யூனிபார்ம் அவரது அழகை, இன்னும் அதிகமாக ரசிக்க வைத்தது. சில காட்சிகளில் சேலை, சுடிதார் அணிந்து, அந்த கெட்டப்களிலும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.
தமிழ் படங்களில் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிவேதா பெத்துராஜ் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஆனால், தமிழ் படங்களில் தரப்படும் அளவுக்கு, தெலுங்கு படங்களில் கதாநாயகிகளுக்கு நடிப்பில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை. கிளாமர் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் மட்டுமே கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஆனால், தமிழ் படங்களில் நடிக்கும்போது ஹீரோயின்களுக்கு கேரக்டர் ரோல் தரப்பட்டு, அவர்களது நடிப்பு திறனை வெளிப்படுத்த நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்.அதனால்தான், தமிழ் படங்களில் நடிக்க மற்ற மொழி நடிகைகளும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தமிழ் பொண்ணாக, தூத்துக்குடியை சேர்ந்த நிவேதா பெத்துராஜூக்கு சரியான தமிழ் படங்கள் அமையாதது வருத்தப்படும் விஷயம்தான்..
சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து தனது லேட்டஸ்ட் படங்களை பதிவேற்றம் செய்துகொண்டே இருக்கிறார். இந்த முயற்சியும், ஆர்வமும் விரைவில் நிறைய தமிழ் படங்களில் அவரை காணும் வாய்ப்பை ரசிகர்களுக்கு உருவாக்கித் தரலாம்.
Nivetha Pethurajதற்போது, மாடர்ன் டிரஸ்சில் விதவிதமான போஸ்களில் நிவேதா பெத்துராஜ், தனது படங்களை அப்டேட் செய்திருக்கிறார். ரசிகர்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் இந்த படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இதற்கு பிறகாவது, இவருக்கு பட வாய்ப்புகள் குவிய வேண்டுமே, என்பதுதான் ரசிகர்களின் ஆசையாக உள்ளது.
மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.