தங்கம் கலந்த தயாரிப்பு: தங்கமே தங்கம் என்று அனைவரையும் தங்கம் என்று அழைப்போம் அத்தகைய தங்கம் இன்று எந்த அளவு விலையின் உச்சத்தை அடைந்துள்ளது என்பது அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட தங்கத்தை கொண்டு சில அழகியல் தயாரிப்புகள் சந்தையில் வெளிவந்துள்ளது. அந்த பொருட்களை இன்றைய இளம் பெண்கள் பெரிதும் விரும்பி வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
Golden face packஎப்படி விரும்பி வாங்கி பயன்படுத்தும் அந்த தங்கம் கலந்த தயாரிப்புகளினால் அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்த கட்டுரை வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
தங்கம் கலந்த தயாரிப்புக்களால் கிடைக்கும் நன்மைகள்
பொதுவாகவே இன்று வேலை பழு காரணமாக கடுமையான மன அழுத்தம் ஏற்படுவதோடு சருமங்களில் சுருக்கம் இளம் வயதிலேயே ஏற்பட்டு வயதான தோற்றத்திற்கு மாறிவிடுகிறார்கள்.
அவர்கள் எந்த தங்கத் துகள்களில் செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தும் போது சருமத்தில் ஏற்படும் சுருக்கம், தோலில் ஏற்படும் கோடுகள் போன்றவை சரியாகிறது. இதற்கு காரணம் இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டு இருப்பதால் உங்களை இளமையோடு காட்டுகிறது.
Golden face packதங்கத்தில் இருக்கும் அயன் சத்தானது உடலில் உள்ள செல் மற்றும் நரம்புகளை தூண்ட உதவி செய்வதால் ரத்த ஓட்டத்தை அதிகரித்து விடுகிறது. இதன் மூலம் சருமச் செல்களில் வளர்சிதை மாற்றம் சீக்கிரத்தில் ஏற்படுவதால் பார்ப்பதற்கு என்றும் பதினாறு என்று கூறும் அளவிற்கு இளமையாக இருப்பீர்கள்.
வறட்சியான சருமம் இருப்பவர்களுக்கு இந்த தங்கத்தின் பயன்பாடு சரும வளர்ச்சியை குறைத்து வயதான தோற்றத்தை தடுத்து விடுகிறது. இதனால் உங்கள் முகம் பளபளப்பாக மாறுகிறது.
எனவே நீங்கள் தினமும் தங்க ஃபேஸ் மாஸ்கை உபயோகிப்பதின் மூலம் அதிக அளவு உங்கள் சருமத்தை பாதுகாப்பதோடு உங்கள் முக அழகை மென்மேலும் அதிகரிக்க முடியும்.
Golden face packஇந்த கோல்டன் ஃபேஸ் பேக் உங்களுக்கு தேவையான கொலஜன் உற்பத்தியை அதிகரிப்பதின் காரணமாக சருமத்தின் நிறம் எப்போதும் ஒரே மாதிரியாக பராமரிக்கப்படும்.
சூரிய ஒளியால் ஏற்படும் தாக்கங்களிலிருந்து உங்கள் முக அழகை பாதுகாப்பதோடு மெலனின் உற்பத்தியை கட்டுக்குள் வைத்துக் கொள்வதின் மூலம் இந்த ஃபேஸ் மாஸ்க் உங்களுக்கு மீண்டும் முகப்பொலிவை தரும்.
தங்கத்தில் மருத்துவ குணங்கள் அதிக அளவு இருப்பதால் ரத்த ஓட்டத்தை அதிகரித்து தோலில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளை குறைப்பதோடு முகப்பருவை குறைக்க வழி செய்கிறது.