ஆத்தாடி… எத்த தண்டி…? அர்த்தனா பினுவை பார்த்து அசந்து போன ரசிகர்கள்

அர்த்தனா பினு, (arthana binu) தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். அதனால், ரசிகர்களுக்கு அவர் பரிச்சயமான ஒரு நடிகைதான். அர்த்தனா பினு, நடிகையாவதற்கு முன்பே டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்திருக்கிறார். மாடலிங் துறையிலும் கால்பதித்து, பல விளம்பர படங்களில், நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அர்த்தனா பினு தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டில், தெலுங்கு மொழில் சீதாம்மா ஆண்டலு, ராமையா சித்ராலு என்ற படத்தில் நடித்து, சினிமா உலகில் அறிமுகமானார்.

arthana binu

அதன் பின்பு, தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். கடந்த 2017 ம் ஆண்டில், சமுத்திரக்கனி நடித்த தொண்டன் என்ற படத்தில், அர்த்தனா பினு நடித்தார். அடுத்த ஆண்டில், இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜ், சரவணன், சூரி என நடிகர் நட்சத்திர பட்டாளமே நடித்தகடைக்குட்டி சிங்கம் படத்தில், அர்த்தனா பினு நடித்திருந்தார். இதில், கார்த்தியை திருமணம்செய்து ஆசைப்படும் முறைப்பெண்களில் ஒருவராக, இவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். முடுகாவ், ஷைலாக் ஆகிய தெலுங்கு படங்களிலும், செம, வெண்ணிலா கபடிக்குழு இரண்டாம் பாகத்திலும் அர்த்தனா பினு நடித்திருந்தார்.

arthana binu

அர்த்தனா பினுவுக்கு தற்போது வயது 23 ஆகிறது. வளர்ந்துவரும் இளம் நடிகையாக இருப்பதால் இன்னும் அதிக படங்களில், தமிழில் அதிகமாக நடிக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.
இவரது சொந்த ஊர் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம். இவரது தந்தை மலையாள நடிகர் விஜயகுமார் – தாயார் பினு டேனியல். அர்த்தனா பினு,

arthana binu

திருவனந்தபுரம் சர்வோதயா வித்யாலயா பள்ளியில் படிப்பை முடித்தார். அவர், பிளஸ்1 படிக்கும்போதே மலையாள டிவி சேனல்களில் தொகுப்பாளராக பணி செய்தார். அந்தளவுக்கு, திறமை, ஆற்றல் மிக்கவராக இளம் வயதிலேயே திகழ்ந்தார். அதன்பின், திருவனந்தபுரம் இவானியோஸ் கல்லூரியில், இளங்கலை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் விஷூவல் கம்யூகேசன் படிப்பை நிறைவு செய்தார்.

arthana binu

கல்லூரியில் படித்த போதே, பகுதி நேரமாக மாடலிங் துறையில் இருந்துக்கொண்டு மாடலிங் செய்தவர் இவர். அதன்பின், ஸ்மார்ட் ேஷா என்ற விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி, பிளவர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி பலத்த வரவேற்பை பெற்றது. அர்த்தனா பினுவும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சுரேஷ் கோபி உடன், ‘நீங்களும் ஆகலாம் கோடிஸ்வரன்’ என்ற நிகழ்ச்சிக்கான விளம்பரங்களில் நடித்தார். இது, இன்னும் அதிகளவில் அவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது.

arthana binu

தொடர்ந்து தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வரும் அர்த்தனா பினு, விளம்பர படங்களில் அதிகமாக நடிக்கிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் அர்த்தனா பினு, அடிக்கடி தனது புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.

இதில், வெரைட்டி, வெரைட்டியான படங்களை தந்து ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறார். கிளாமரான இவரது புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. ரசிகர்கள், இந்த படங்களை பார்த்து, பார்த்து ரசித்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …