இந்தக் கோடை காலத்தில் நமது நா வறட்சியை தடுத்து, உடலுக்கு தேவையான நீர் சத்தினை அதிகளவு தரும் பழங்களில் இந்த முலாம் பழம் ஒன்று. இந்த பழத்தை உண்ணுவதன் மூலம் உங்கள் உடல் உஷ்ணம் அடையாமல் குளிர்ச்சியாக இருக்கும்.
மேலும் இந்த பழத்தில் வைட்டமின்கள், கனிம சத்துக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஏராளமான அளவு உள்ளதால் கோடை காலத்தில் நிறைய பேர் இந்த பழத்தை விரும்பி ஜூஸாக குடித்து வருகிறார்கள்.
மேலும் இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய தன்மையை கொண்டது. அதுமட்டுமல்லாமல் இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்வதால் ஆரோக்கியமான பழம் என்று அடிக்கடி முலாம்பழம் ஜூஸ் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். அது முலாம்பழ ஜூஸ் விஷயத்திலும் அப்படித்தான் உள்ளது. எனவே வாரத்திற்கு இருமுறையோ அல்லது மாதத்திற்கு நான்கு ஐந்து முறையோ நீங்கள் முலாம்பழ ஜூசை பருகுவதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதை விடுத்து தினம்தோறும் இந்த ஜூசை பருகுவதன் மூலம் உங்களுக்கு எண்ணற்ற தீமைகள் ஏற்படுகிறது.
MUSKMELONகுறிப்பாக அதிக அளவு முலாம்பழத்தை நீங்கள் ஜூஸாக குடிக்கும் போது ரத்தத்தில் சர்க்கரையை உயர்த்தக்கூடிய பெரும் பங்கினை இது செய்கிறது. இதன் மூலம் சர்க்கரை நோய் எளிதில் ஏற்படும்.
மேலும் இது இரைப்பை குடலை பாதிக்கக்கூடிய தன்மைகளைக் கொண்டு இருப்பதால் செரிமான மண்டலத்தை பாதிப்படையச் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்கள் வளர இது உறுதுணையாக இருப்பதால் வயிற்றில் நுண்ணுயிரிகள் எளிதில் வளரக்கூடிய தன்மையை இது ஏற்படுத்திக் கொடுத்து விடும்.
MUSKMELONமேலும் சர்க்கரை மூலக்கூறு அதிகம் இருக்கும் இந்த பழத்தை நீங்கள் அதிகமாக சாப்பிடும் போது வயிற்றுப்போக்கை உண்டாக்கக்கூடிய அபாயத்தையும் தருகிறது. அது மட்டுமல்லாமல் வாயு தொல்லையை ஏற்படுத்தக்கூடிய தன்மை முலாம் பழத்திற்கு உள்ளது.
எனவே நீங்கள் முலாம்பழத்தை ஜூஸாக பருக பகல் வேளை தான் சிறந்தது.எனவே மாலை வேளையில் தயவு செய்து இந்த பழத்தை உட்கொள்வதின் மூலம் அஜீரண கோளாறுகள் உங்களுக்கு ஏற்படும். அது மட்டும் அல்லாமல் உடல் எடை அதிகமாக்கும் சக்தி இதற்கு உள்ளது.