சித்திரை பிறந்து விட்டாலே மா, பலா விளைச்சல் அதிகமாக இருப்பதன் காரணமாக மாம்பழமும் பலாப்பழமும் நமக்கு அதிக அளவு கிடைக்கும். ஆனால் இந்த மாம்பழம் மற்றும் பலா பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து அவற்றை சந்தையில் விற்பனை செய்கிறார்கள்.
இப்படி செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யக்கூடிய பழங்களை நாம் சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற பாதிப்புகள் நமது உடலுக்கு ஏற்படுகிறது.
இதனைத் தவிர்க்க செயற்கை முறையில் எப்படி பழுக்க வைத்திருக்கிறார்கள் என்று தெரியாமல் இருக்கும். நீங்கள் அந்தப் பழங்களை எப்படி தேர்வு செய்து சாப்பிடுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதை எந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மாம்பழத்தை பொறுத்தவரை கார்பைட் கல்லுகளைக் கொண்டு பழுக்க வைத்த பழங்களில் கருமை நிற புள்ளிகள் ஆங்காங்கே இருக்கும். மேலும் நீங்கள் அந்த பழத்தை நறுக்கிப் பார்க்கும்போது கொட்டை பகுதி மற்றும் கொட்டையை ஒட்டி இருக்கும் சதை பகுதி வெளிர் நிறத்தில் காணப்படும்.
mangoஎனவே இத்தகைய தன்மையில் இருக்கும் பழங்களை நீங்கள் வாங்கி சாப்பிட வேண்டாம். இயற்கையாக பழுக்க வைத்த பழங்களில் நல்ல வாசனை ஏற்படும் ஆனால் இந்த வாசனை செயற்கை முறையில் பழுத்த படங்கள் கிடைக்காது.
பலா பழத்தை பொறுத்தவரை எளிதில் பழுக்க வைக்க பலாப்பழத்தை அப்படியே பாறைகளில் குத்தி எடுத்து வருவார்கள். அத்தகைய பழங்களில் சுவை இருக்காது. மேலும் பலாப்பழத்தின் முட்கள் நன்கு விரிந்து இருக்கக்கூடிய பழங்களைத் தேர்வு செய்து நீங்கள் எடுக்கலாம் அப்படி இருக்கும்போது பலம் நன்கு பழுத்து சுவையாக இருக்கும்.
mangoஎனவே இனிமேல் சந்தைகளில் பழம் வாங்கும் போது மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் ஃபாலோ செய்து வாங்கும்போது செயற்கை முறையில் பழுக்க வைத்திருக்கும் பழங்களை வாங்காமல் இயற்கையாக பழுத்திருக்கும் பழங்களை உங்களால் எளிதில் வாங்கி பயன் பெற முடியும்.