“எட்டாம் வகுப்பு முடித்தாலே போதும்..!” – தபால் துறையில் வேலை ரெடி..!

மும்பை: மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தபால் துறையில் தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்புகள்  வந்துள்ளது.

இது தற்போது காலியாக இருக்கக்கூடிய skilled Artisans பிரிவில் பல காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. குறிப்பாக இதில் மோட்டார் வாகனப் பணிக்கு மூன்று பேர் ,மோட்டார் வாகன எலக்ட்ரீசியன் பணிக்கு இரண்டு பேர், வெல்டர், டயர் மேன், பெயிண்டர், பிளாக்சிமித் உள்ளிட்ட பணிகளுக்கு தலா ஒருவர் என்ற விகிதத்தில் பத்து பேர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

job

இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய ஐ டி ஐ யில் சான்றிதழ் பெற்றிருப்பது அவசியமாகும். அப்படி அந்த சான்றிதழ் இல்லாவிட்டால் குறைந்த பட்டம் எட்டாம் வகுப்பு தகுதியை பெற்றுயிருக்க வேண்டும். மேலும் மெக்கானிக் பணிக்கு விண்ணப்பம் செய்பவர் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது மிகவும் அவசியமானது.

இந்த பணிக்கு 18 வயது முதல் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிகளின் படி வயது வரம்பு சலுகைகளும் கிடைக்கும்.

job

இந்தப் பணிகளுக்கான சம்பளம் 19,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பணிக்கு நீங்கள் விண்ணப்பம் செய்ய விரும்பினால் வரும் மே மாதம் 13-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்வது அவசியமாகும்.

 விண்ணப்பம் செய்பவர்கள் அனைவரும் Trade டெஸ்ட் என்ற தேர்வின் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார்கள்.

job

எனவே விண்ணப்பத்தை நீங்கள் வலைதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொண்டு உரிய ஆவணங்களோடு கீழ்காணும் முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் செய்வதின் மூலம் நீங்களும் இந்தத் தேர்வினை எழுதி வெற்றியடைய வாய்ப்புகள் உள்ளது.

உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The senior manager

Mail motors service

134 – A Sudam kalu Ahire marg, Worli, Mumbai 4000018

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam