சிருஷ்டி டாங்கே, (Srushti Dange) தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் நடிப்பாற்றல் மிக்கவர். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில், நல்ல நடிப்பு திறமையை வெளிப்படுத்தி, தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டவர்.கடந்த1992 ம் ஆண்டில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிறந்தார். புனேவில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.
கடந்த 2010 ம் ஆண்டில் மராத்தி மொழி படமான “எகுல்டி ஏக்” என்ற படத்தில், சிருஷ்டி டாங்கே சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தில், பாடகியாக வேண்டும் என்று கனவு காணும் ஸ்வரா என்ற இளம் பெண்ணாக அவர் நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பலத்த வரவேற்பைப் பெற்றது, மேலும் சிருஷ்டியின் யதார்த்தமான நடிப்பு பாராட்டப்பட்டது.
இந்த படத்திற்கு பிறகு, அவர் தொடர்ந்து நடிக்கவில்லை. தனது படிப்பை முடிப்பதற்காக, நடிப்பை சிறிது காலம் தள்ளி வைத்தார். அவர் 2013 ம் ஆண்டில் புனே இன்ஸ்டிடியூட் ஆப் கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றார். அதன்பின், நடிப்பின் மீதான அவரது ஆர்வம் குறையாததால், மீண்டும் அவர் சினிமாத் துறைக்கு திரும்பினார்.
Srushti Dangeகடந்த 2015ம் ஆண்டு, “மேகா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிருஷ்டி டாங்கே. ‘மேகா’ என்ற முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் சிறந்த வெற்றியைப் பெற்றது, மேலும், படத்தில் சிருஷ்டியின் இயல்பான நடிப்பு பாராட்டப்பட்டது.
டார்லிங், யுத்தம் செய், கத்துக்குட்டி, எனக்குள் ஒருவன், ஜித்தன் 2, தர்மதுரை, அச்சமின்றி, நவரச திலகம், முப்பரிமானம், சரவணன் இருக்க பயமேன், காலக்கூத்து, பொட்டு, சத்ரு, ராஜாவுக்கு செக், சக்ரா உள்ளிட்ட பல படங்களில், சிருஷ்டி டாங்கே நல்ல நடிப்பை தந்து, ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Srushti Dangeசிருஷ்டி டாங்கே, நல்ல அழகான, நடிப்பாற்றல் கொண்ட, திறமையான நடிகையாக இருந்தும், தமிழ் சினிமாவில் முன்னணி இடத்துக்கு அவரால் முன்னேற முடியவில்லை.
இதனால், ஒரு சில படங்களில் கதாநாயகிகளுடன் ஒருவராகவும், சில படங்களில் தங்கை, பிளாஷ்பேக்கில் வரும் முன்னாள் காதலி போலவும் சின்ன சின்ன கேரக்டர்களிலும் அவர் நடித்துள்ளார்.
தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்தாலும், தமிழ் சினிமாவில் கிடைக்கும் அங்கீகாரமும், ரசிகர்களின் வரவேற்பும், வருமானமும் தெலுங்கு சினிமாவில் கிடைக்காது என்பதே உண்மை.
தமிழ் சினிமாவில், கதாநாயகிகளுக்கு நடிப்பதற்கான வாய்ப்பும், நல்ல நல்ல கதாபாத்திரங்களும் தரப்படும். ஆனால் தெலுங்கு படங்களில் பெரும்பாலும் கவர்ச்சிக்காகவும், நடனத்துக்காகவும் மட்டுமே கதாநாயகிகள் அதிகளவில் தேவைப்படுகின்றனர்.
Srushti Dangeதெலுங்கு மொழியில் ஹீரோயிசம் சார்ந்த படங்களில், ஹீரோயின்கள் சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்லும் அளவுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. பல தெலுங்கு படங்களில் ஹீரோ– வில்லன் இருவருமே படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொள்வதால், ஹீரோயின்களுக்கு நடிக்க வாய்ப்பும் இருக்காது, காட்சிகளும் இருக்காது.
அந்த வகையில், தெலுங்கு படங்களில் நடித்தாலும், சிருஷ்டி டாங்கே அங்கு இதுவரை அங்கு பெரிய அளவில் முக்கியத்துவம் பெறவில்லை.
Srushti Dangeஎனினும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் சிருஷ்டி டாங்கே, கவர்ச்சி படங்களை அப்டேட் செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில், இந்த லேட்டஸ்ட் படங்கள் செம வைரலாகி வருகின்றன.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.