24 ஏப்ரல் 2023 திங்கட்கிழமை – ராசிபலன் – Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2023 திங்கட்கிழமை. ஒருவரின் பிறந்த ஜாதகத்தை பார்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை அறிந்து கொள்வதோடு கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டும் அல்லாமல் நல்ல நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் கிரகங்களின் பார்வை எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்வதின் மூலம் கிரகங்களின் பார்வை குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த கிரகங்களின் பார்வையை அதிகரிக்க சில பரிகாரங்களை செய்து நாம் வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்யலாம். இதற்கு உறுதுணையாக இருக்கும் ஜோதிட கலையில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை பின்பற்றி வாழ்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி  விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

.மேஷ ராசி அன்பர்களே இன்று உங்களிடம் தேவையில்லாத உணர்வுகள் அதிகமாக காணப்படும். இதை நீங்கள் தவிர்த்தல் மிகவும் அவசியம் ஆனது. உங்கள் முயற்சியில் வெற்றி பெற தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்வது அவசியமாகும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணி நிமித்தமாக நீங்கள் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். சக பணியாளர்களோடு ஏற்படும் மோதலை நீங்கள் தவிர்ப்பது உங்களது பணியை சிறப்பாக செய்ய உதவி செய்யும்.

நிதி நிலைமையை பொருத்தவரை இன்று நிதி ஆதாயம் குறைவாகவே காணப்படும். தேவையற்ற செலவுகள் வந்து சேரும். எனவே உங்களுக்கு இதன் மூலம் கவலை ஏற்படும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியமானதாகும். வலி மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனத்தில் செலுத்தவும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு வளர்ச்சி ஏற்படாத நாள் என்று கூறலாம். பொறுமையும், உறுதியும் மிக அவசியமானதாகும். எதையும் எண்ணி செயல்படுத்துவது மிகவும் அவசியம்.எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பு பலமுறை யோசித்து விடுவது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாது.

பணியை பொருத்தவரை உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் இருக்கும் சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை அஜாக்கிரதை காரணமாக இன்று உங்களுக்கு பண பலவீனம் ஏற்படலாம். எனவே நீங்கள் இன்று பணத்தை சேமிக்க முடியாது. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திற்காக பணத்தை செலவு செய்ய நேரிடும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை பதட்டம் காரணமாக தலைவலி ஏற்படும். உங்கள் உணவு பழக்கத்தை நீங்கள் மாற்றி அமைப்பது மிகவும் முக்கியமானதாகும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களை இன்று உங்கள் முயற்சியில் வெற்றிகள் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் தளர்ந்து விட வேண்டாம். சிலர் சௌவுரியங்களை என்று இழக்க நேரிட சந்தரப்பம் ஏற்படும். எனவே எதையும் பொறுமையாக கையாள்வது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பொறுப்புக்கள் அதிகரித்தாலும் வெற்றிக்கான சூழ்நிலை உள்ளது. நீங்கள் உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்வதின் மூலம் எளிதில் பணிகளை முடித்து விடலாம்.

நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகமாகவே உள்ளது.மேலும் பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்ய வேண்டியது அவசியம் என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை என்று சுமாரான நாளாகவே உள்ளது. சில அசௌவுரியங்கள் ஏற்படலாம். செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவே ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு அதிக முயற்சி செய்தால் மட்டுமே நல்ல பலன்கள் கிடைத்து வெற்றியும் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் முதலிடம் வரவேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருப்பதால் அதற்கு ஏற்பது போல நீங்கள் உழைத்து முன்னேற வேண்டும்.

தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை அதிக பணிச்சுமையை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எதையும் லேசாக எடுத்துக் கொள்வதின் மூலமும் திட்டமிடுதல் மூலமும் பணியை எளிதாக முடித்து விடலாம்.

நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பான வளர்ச்சி இல்லை. பண  பரிவர்த்தனையின் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். பணத்தை சிக்கனமாக செலவு செய்ய முயற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்கள் தோள்களில் காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் அப்போதுதான் ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம்

சிம்மராசி அன்பர்களே இன்று ஆற்றல் மிகுந்து இருக்கும்.எனினும் எளிதில் வெற்றி கிடைக்காது என்பதால் உங்களுடைய திருப்தி இருக்காது. எனவே எதையும் யோசித்து செய்வது அவசியமாகும்.

தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை நீங்கள் பயணங்கள் அதிகமாக செய்ய வேண்டி இருக்கும். உங்கள் பணியில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். எனவே தொழில் ஸ்தானத்தில் கவனத்தை செலுத்துவது அவசியம்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணத்தை என்று பெருமளவு சேமிக்க முடியாது. செலவுகள் அதிகரித்து இருக்கு.ம் நிதி நிலைமை ஸ்சிரத்தன்மை இழந்து இருக்கும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை தலைவலி, பல்வலி போன்ற உபாதைகள் உங்களுக்கு அதிகளவு ஏற்படலாம். ஆரோக்கியமான உணவுகளை உண்பதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

கன்னி

கன்னி ராசியின் நண்பர்களே இன்று உங்களுக்கு சில தடைகள் ஏற்பட்ட பிறகு நற்பலன்கள் கிடைக்கக்கூடிய நாளாக உள்ளது. உங்கள் செயல்களுக்கும் முன்னுரிமை கொடுத்து உணர்ந்து செயல்படுவதின் மூலம் நல்ல லாபத்தை பார்க்க முடியும்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பொறுமையை கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் வெற்றியை அடைய முடியும். சக பணியாளர்களிடம் கவனத்தை கையாளுவது அவசியமானதாகும். இல்லையென்றால் நீங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று பணம் வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும். சீரான நிதி நிலைமையை தக்க வைத்துக்கொள்ள நீங்கள் திட்டமிட்டு செலவுகளை செய்வதோடு சேமிக்கவும் முயற்சி செய்ய வேண்டும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை மிதமான ஆரோக்கியம் உள்ளது. பதட்டம் காரணமாக தலைவலி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியமாகும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு பொறுப்புக்கள் அதிகரித்து இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நாளாக இல்லை. எந்த நாளில் நீங்கள் எதையும் முயற்சி செய்துதான் முடிக்க வேண்டும்.

பணி சூழல் சிறப்பாக இருக்காது. ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுவதால் பணியில் கவனத்தை செலுத்துவது அவசியமானதாகும்.

நிதிநிலைமையை பொறுத்தவரை ஏற்ற, இறக்கங்களோடு உள்ளதால் பண பரிவர்த்தனையை நீங்கள் கவனத்தோடு செய்வது நல்லது.மேலும் செலவுகளை கண்காணிக்க வேண்டும். சிக்கனமாக செலவு செய்ய முயற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை பல்வலி, தலைவலி ஏற்படலாம். உணவு முறையில் கவனம் தேவை. சீரான உணவை எடுத்துக் கொண்டால் சிறப்பாக உங்கள் ஆரோக்கியத்தை வைத்துக் கொள்ளலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் நண்பர்களே இன்று பொறுமை மிகவும் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எதிலும் தடங்கல்கள் ஏற்படுவதால் மனதை தளரவிடாமல் முயற்சி செய்வதின் மூலம் முன்னேற்றத்தை பார்க்க முடியும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இறுக்கமான நிலையை உள்ளது. தைரியம் மற்றும் உறுதியின் மூலம் நீங்கள் உங்கள் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு சிறப்பாக இருக்கக்கூடிய நாளாக இந்த நாள் இல்லை. கடின உழைப்பை நீங்கள் நம்பியே ஆகா வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். பண வரவுக்காக நீங்கள் காத்திருங்கள். கட்டாயம் கிடைக்கும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது மிகவும் முக்கியமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே என்று நன்மையும் தீமையும் கலந்தே உங்களுக்கு கிடைக்கும்.நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள்.மேலும் தாமதமாக எல்லாமே நடக்கும். எனவே வருந்தம்  வேண்டாம்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் இறுக்கமான சூழ்நிலையை நிலவுகிறது. திறமையை கையாள நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணி நிமித்தமாக பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகளும் உங்களுக்கு வந்து சேரும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை உற்சாகம் அளிக்க கூடிய வகையில் உங்களது நிதி நிலைமை இல்லை .பணத்தை பொருத்தவரை பொறுப்புகளை நிறைவேற்ற நீங்கள் கடினமாக உங்கள் பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும்.நீங்கள் திட்டமிட்டு செயல்படுவதின் மூலம் ஓரளவு சிக்கனத்தை கடைபிடிக்கலாம்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை சுமாராகவே இருக்கும். உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்காக பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியமாகும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று உறுதியும், அர்ப்பணிப்புத் தன்மையும் உங்களுக்கு வெற்றிகளை கொண்டு வந்து சேர்க்கும். திட்டமிட்டு செயலாற்றுவதின் மூலம் பெருமளவு நன்மைகளை இன்று பார்த்துவிடலாம். எனவே இந்த நாள் உங்களுக்கு ஒரு இனிய நாள் என்று கூறலாம்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகள் தவறுகளை தவிர்க்க கவனமாக பணியாற்றுவது அவசியமானதாகும். உங்களது முயற்சிகளின் மூலம் நல்ல பலன்கள் வந்து கிடைக்கும்.எனவே

தொழிற் ஸ்தானத்தை பற்றி கவலை வேண்டாம். நிதிநிலைமையை பொறுத்தவரை ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். பணத்தை சேமிப்பது கடினமாக இருக்கும். எனவே சிக்கனத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.

ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். மேலும் அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அதற்காக நீங்களும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே நீங்கள் இன்று சுமாரான பலன்களை பார்ப்பீர்கள்.மேலும் பொறுப்புக்கள் அதிகமாக இன்று உங்களுக்கு இருக்கும். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நீங்கள் சற்று உழைக்க வேண்டியிருப்பதால் கவலை ஏற்படும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை நேர்மையாக அணுகுமுறையை மேற்கொள்வதின் மூலம் உங்கள் பணியை சிறப்பாக தங்கு தடை இல்லாமல் முடித்து விடலாம். எனவே தொழிலில் அக்கறை காட்டுவது அவசியம் ஆகும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பங்கு வர்த்தகத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும். செலவு செய்வதற்கு முன்பு கவனமாக யோசித்து செலவு செய்யவும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை செரிமான சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியமாகும்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று நீங்கள் கவலையோடு இருப்பீர்கள். உங்கள் செயல்களை கவனமாக கையாள வேண்டியது அவசியமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணி சூழல் சாதகமாக இல்லை. உங்கள் கீழ் பணிபுரிவோரிடம் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் தொழில் கட்டாயம் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணம் சேர்ப்பது என்பது கடினமாக இருக்கும். ஏற்றத்தாழ்வுகளோடு நிதிநிலைமை இருப்பதால் சிக்கனத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்கள் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்ப அங்கத்தினர்களின் உடல் நிலைக்காக நீங்கள் செலவு செய்ய நேரிடலாம் எனும் நீங்கள் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …