பயோட்டின் லட்டு:அடர்த்தியான கூந்தலைப் பெறவும் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு பயோட்டின் மிக முக்கியமான பொருளாக விளங்குகிறது. மேலும் இந்த பயோட்டின் உங்களது மூளை, தோல், கண்கள், முடி, கல்லீரல் போன்ற உறுப்புக்களுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய அற்புதமான ஊட்டச்சத்து நிறைந்த பொருளாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.
Biotin Ladduமேலும் உங்கள் நரம்பு மண்டலத்தை வலுவேற்றக்கூடிய இந்த பயோட்டின் லட்டை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
பயோட்டின் லட்டு செய்ய தேவையான பொருட்கள்
1.பாதாம் பருப்பு ஒரு கப்
2.வால்நட் ஒரு கப்
3.சூரியகாந்தி விதை ஒரு கப்
4.முலாம்பல விதை ஒரு கப்
5.பூசணி விதை ஒரு கப்
6.ஆளி விதை இரண்டு டேபிள் ஸ்பூன்
7.தேங்காய் துருவல் கால் கப்
8.பேரிச்சம்பழம் எட்டு
9.நாட்டு சக்கரை அல்லது வெல்லம் அரை கப்
10.ஏலக்காய் பொடி அரை டீஸ்பூன்
Biotin Ladduசெய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடு பண்ணி அதில் பாதாம் பருப்பு, வால்நட், சூரியகாந்தி விதை, முலாம்பழ விதை, பூசணி விதை, ஆளி விதை ஆகியவற்றை மிதமான தீயில் கருக விடாமல் ஐந்து நிமிடங்கள் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வறுத்த இந்த பொருட்களை அகலமான ஒரு தட்டத்தில் கொட்டி விட்டு ஆறவிடுங்கள். இந்த நட்ஸ் வகைகளிலும் விதைகளிலும் தான் அதிக அளவு பயோடின் சத்து உள்ளது.
Biotin Ladduஇதனை அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஆறிய இந்தப் பொருட்களை போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனோடு தேங்காய் துருவல், பேரிச்சம்பழம், நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் பொடி இவற்றையும் போட்டு மிக்ஸியில் ஒரு தட்டு தட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த இந்த பொடிகளை உங்கள் கைகளால் அழுந்த பிடித்து உருண்டைகளாக மாற்றி விட்டால் அழகான பயோடின் லட்டு நமக்கு கிடைத்துவிடும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவதின் மூலம் என்னற்ற நன்மைகள் கிடைக்கிறது.
நீங்களும் உங்கள் வீட்டில் இந்த லட்டை முயற்சி செய்து பாருங்கள் கட்டாயம் நல்ல முறையில் உங்களால் செய்ய முடியும். அப்படி செய்தால் ஒரு வாரம் வரை இந்த லட்டை நீங்கள் வைத்திருந்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பயன்படுத்தலாம்.