ப்பா.. இது பொண்ணா இல்ல, உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணையா..? – சுண்டி இழுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்..!

ஸ்ரீதேவி விஜயகுமார்,(Sridevi Vijayakumar) சினிமா குடும்ப பின்னணியை கொண்டவர். இவரது குடும்பம் சார்ந்த அனைவருமே, சினிமா சார்ந்தவர்கள்தான். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதியின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி விஜயகுமார்.

மற்றொரு மகள் ப்ரீத்தா விஜயகுமார், இயக்குநர் ஹரியின் மனைவி. இன்னொரு மகள் வனிதா விஜயகுமார், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானவர். விஜயகுமாரின் மகன் அருண் விஜய், இவரும் பிரபல நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.

Sridevi Vijayakumar

ஸ்ரீதேவி விஜயகுமார், குழந்தை நட்சத்திரமாக கடந்த 1992ல், ரிக்ஷா மாமா என்ற படத்தில், அறிமுகமானார். நடிகர் சத்யராஜ், ரிக்ஷா ஓட்டும் தொழிலாளியாக நடித்த இந்த படத்தை, பி. வாசு இயக்கி இருந்தார்.

இதில், குஷ்புவின் மகளாக, ஸ்ரீதேவி 6 வயது பெண்ணாக நடித்திருப்பார். ஆனால், குஷ்புவின் தந்தையாக, விஜயகுமார் நடித்திருப்பார். கதைப்படி, விஜயகுமாருக்கு தேவி பேத்தியாக இருப்பார். இந்த படம், நல்ல வெற்றியை பெற்றது. குழந்தை கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி சிறப்பாக நடித்திருப்பார்.

Sridevi Vijayakumar

அடுத்து, பாக்யாரஜ் நடித்த அம்மா வந்தாச்சு படத்திலும், அம்மாவுக்காக ஏங்கும் கேரக்டரில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். டேவிட் அங்கிள், தெய்வக்குழந்தை, சுகமான சுமைகள் வரை, சிறுமியாக நடித்த ஸ்ரீதேவி, வளர்ந்த பின் கதாநாயகியாக நடித்த படங்கள்தான் காதல் வைரஸ், பிரியமான தோழி, தி்த்திக்குதே, தேவதையை கண்டேன்.

Sridevi Vijayakumar

இந்த படங்களளில் பிரியமான தோழி, தேவதையை கண்டேன் படங்கள் ஸ்ரீதேவிக்கு மிக முக்கியமான படங்களாக அமைந்தன. பிரியமான தோழி படத்தில், மாதவனுக்கு பெண் தோழியாக ஜூலி கேரக்டரில் மிகச்சிறந்த நடிப்பை தந்திருந்தார் ஸ்ரீதேவி.

அதே போல், கேனில் டீ விற்கும் தனுஷ் சை காதலித்து, பின் நிராகரிக்கும் ஒரு கேரக்டரிலும் இந்த படத்தில் நடித்திருந்தார் ஸ்ரீதேவி.

Sridevi Vijayakumar

விஜயகுமார் – மஞ்சுளா தம்பதி மகள்களில், மிகவும் அமைதியானவர், மென்மையானவர் என பெயரெடுத்தவர் ஸ்ரீதேவி, பொது இடங்களில், வனிதா விஜயகுகுமார் போல, எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்.

சினிமாவில் விஜயகுமாருக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உட்பட அனைவருமே நெருங்கிய நண்பர்கள்தான். கேஎஸ் ரவிக்குமார், சேரன் என, பிரபலமான இயக்குநர்கள் அனைவருமே விஜயகுமார் சொன்னால், மறுக்காமல் அதை செய்யும் அளவுக்கு அன்புக்குரியவர்கள்தான்.

Sridevi Vijayakumar

ஆனால்,. ஸ்ரீதேவி தனது தந்தை அல்லது தாயார் செல்வாக்கை பயன்படுத்தி சினிமா வாய்ப்புகளை தேடிச் செல்லவில்லை. யாரிடத்திலும் சிபாரிசு செய்ய தனது பெற்றோரை வற்புறுத்தவில்லை.

தனக்கு பிடித்தமான கேரக்டர் அமைந்த படங்களில் நடித்தார். கிளாமர் ரோல்ககளில் நடிக்க வந்த பட வாய்ப்புகளை நிராகரித்தார். எந்தவிதமான கிசுகிசு களும் இல்லாமல், வாழ்க்கையை தனது குடும்பத்துடன் தொடர்கிறார்.

Sridevi Vijayakumar

சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஸ்ரீதேவி விஜயகுமார் மிக அழகாக சுடிதாரில் காட்சியளித்தார். அந்த புகைப்படங்கள் வைரலாகின. இப்போது, ஸ்ரீதேவி புடவையில் இருக்கும் அசத்தலான புகைப்படங்கள், பார்க்கவே கண்களில் ஒற்றிக்கொள்ளும் அளவுக்கு மாஸ் ஆக இருக்கின்றன. இந்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam