உஷ்ஷ்..! – இதனால் தான் ராஷ்மிகா மந்தனா அந்த மேட்டரை ஒப்புக் கொள்ள மறுக்கிறாராம்..!

நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ( Rashmika Mandanna ) விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பல்வேறு தளங்களில் இவர்களுடைய காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இவர்களுடைய சொந்த இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படங்கள் வெளியாகின.

Rashmika Mandanna

அதாவது நடிகை ராஷ்மிகா மந்தனா மாலத்தீவில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். மாலத்தீவில் நீச்சல் குளத்தில் டூபிஸ் நீச்சல் உடையில் குதூகலமாக இருந்த நடிகை ராஸ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

Rashmika Mandanna

அந்த சமயத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே மாலத்தீவில், நடிகை ராஸ்மிகா மந்தனா இருந்த அதே நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

கையில் மதுபாட்டில் உடன் போஸ் கொடுத்திருந்த விஜய் தேவாரகொண்டாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இருவரும் ஒரே படத்தில் நடிக்கவில்லை என்ற நிலையில் ஒரே இடத்தில் எதற்காக இவர்கள் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

Rashmika Mandanna

மட்டுமில்லாமல் நடிகர் விஜய் தேவாரகொண்டா அணிந்திருந்த கூலிங் கிளாஸ்-ஐ நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்த நாள் அணிந்து கொண்டு போஸ் கொடுக்கிறார். இன்று அணிந்து ராஷ்மிகா அணிந்து கொண்டிருக்கும் கூலிங் கிளாஸ்-ஐ நடிகர் விஜய் தேவாரகொண்டா அடுத்த நாள் அணிந்து கொண்டு போஸ் கொடுக்கிறார்.

எப்படி இந்த கூலிங் கிளாஸ்கள் கைமாறுகிறது. இருவரும் தீவிரமான காதலில் இருக்கிறார்கள் என்று அப்படியான ஆதாரப்பூர்வமான சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Rashmika Mandanna

ஆனாலும் கூட நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய காதலை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். விஜய் தேவரை கொண்டு குறித்து கேட்டால், அவர் என்னுடைய நெருங்கிய நண்பர் அவ்வளவுதான். என்னுடைய வளர்ச்சியில் அவருடைய பங்கு மிகப் பெரியது என மட்டும் கூறுகிறாரே தவிர காதலை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

இது குறித்து விசாரித்த பொழுது இருவரும் தற்போது திருமணம் செய்து கொள்வது இருவருடைய சினிமா வாழ்க்கைக்கும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுமோ என்ற அச்சம் தான் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள் என்றும் விரைவில் இவருடைய திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

Rashmika Mandanna

ஜாதகம் போன்ற விஷயங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனா-வுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறதாம். இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு திருமணம் என்ற பேச்சை எடுக்கவே கூடாது என்ற நிலையில் அவருடைய ஜாதகம் இருப்பதாகவும் எனவே திருமணம் காதல் உள்ளிட்ட விஷயங்களை பொதுவெளியில் அறிவிக்காமல் இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam