“நீங்கள் வைக்கும் குழம்பு காரம் அதிகமானால் சரி செய்ய..!” – இப்படி பண்ணலாம்..!”

சில சமயங்களில் நாம் வைக்கின்ற குழம்பு காரம் அதிகமாகி சாப்பிட முடியாத பக்குவத்தில் இருக்கும். அப்படி இருக்கக்கூடிய சமயத்தில் அந்த காரத்தை குறைத்து குழம்பினை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி சில குறிப்புகளை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

reduce-the-spiciness-in-food

நீங்கள் வைக்கும் குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் உடனடியாக இதனை சரி செய்ய வீட்டில் நிலக்கடலை இருந்தால் அந்த நிலக்கடலையை எடுத்து சிறிதளவு அரைத்து குழம்பில் போட்டு கொதித்து விடுங்கள். இதன் மூலம் காரம் குறைந்து குழம்பு சாப்பிட சூப்பராக இருக்கும்.

முந்திரிப் பருப்பை லேசாக அரைத்து குழம்பில் சேர்க்கும் போது குழம்பில் உள்ள காரம் அப்படியே குறைந்து விடும். இந்த குறிப்பையும் நீங்கள் பயன்படுத்தி நீங்கள் வைக்கும் குழம்பின் காரத்தை அப்படியே மாற்றிவிடலாம்.

reduce-the-spiciness-in-food

மேலும் காரம் அதிகமாக இருக்கக்கூடிய பட்சத்தில் குழம்பின் புளிப்பு சுவையை அதிகரிப்பதின் மூலம் காரத்தை கொடுத்த குறைத்து விடலாம். அதற்காக நீங்கள் எலுமிச்சை சாறு அல்லது புளி கரைசலை பயன்படுத்துவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

 தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி நன்கு வதக்கி குழம்பில் போடுவதின் மூலம் குழம்பின் காரம் குறைந்து விடும்.

reduce-the-spiciness-in-food

குழம்பின் சுவையைக் கூட்டுவதற்கும், குழம்பின் காரத்தை தவிர்ப்பதற்கும் நீங்கள் குழம்புக்கு தாளித்துக் கொட்டும்போது நெய்யை விட்டு தாளித்துக் கொட்டினால் குழம்பில் இருக்கும் காரம் அப்படியே மறைந்துவிடும்.

reduce-the-spiciness-in-food

அதுமட்டுமல்லாமல் குழம்பின் காரத்தை குறைக்க தயிரை நன்கு அடித்து அதனோடு சேர்க்கலாம். அதுபோலவே பன்னீர் பட்டர் மசாலா, பட்டாணி மசாலா போன்ற கிரேவிகளுக்கு கிரீமை பயன்படுத்துவது போல குறிப்பிட்ட அளவு கிரீமை உங்கள் குழம்புகளில் பயன்படுத்தலாம் இதன் மூலம் காரம் குறையும்.

மேற்கூறிய குறிப்புகளை பயன்படுத்தி நீங்கள் உங்கள் குழம்பில் காரம் ஏற்பட்டால் உடனடியாக அதை குறைக்க இந்த வழியை கையாண்டு பாருங்கள். கட்டாயம் பலன் கிடைக்கும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam