“கரும்புச்சாறு குடிச்சா..!” – இம்புட்டு நன்மைகளா?

கரும்புச்சாறு குடிப்பதன் மூலம் சூடு ஏற்படும் என்று பரவலான கருத்துக்கள் நிலவி வரும் வேளையில் இந்த கோடையில் உடல் சூட்டுக்கு பஞ்சம் இருக்காது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கோடையில் கரும்புச் சாறு கிடைப்பதின் மூலம் எத்தகைய நன்மைகள் ஏற்படுகிறது என்பதை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Cane juice

கோடை காலத்தில் நமது உடலில் தேவையான அளவு நீர்ச்சத்தை நாம் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே உங்களுக்கு அடிக்கடி ஏற்படும் சோர்வை தடுப்பதற்கு கரும்புச் சாறு ஒரு மிகச்சிறந்த பானம் என்று கூறலாம். எந்த கரும்பு சாறினை நீங்கள் பருகுவதின் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றல் உடனடியாக உங்களுக்கு கிடைக்கும்.

அதுமட்டுமல்லாமல் உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கக்கூடிய பணியை கரும்புச்சாறு செய்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் கரும்பு சாறு குடிப்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படாது.

Cane juice

கோடை வெயிலுக்கு ஏற்ற கரும்புச்சாறு உங்கள் உடலை நீரேற்றத்தோடு வைத்துக் கொள்ள உதவி செய்யும். அது மட்டுமல்லாமல் இழந்த எலக்ரோடுகளை உடனடியாக கொடுக்கக்கூடிய அற்புத பானமாக இந்த கரும்புச்சாறு விளங்குகிறது.

உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், பிலிரூபின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள இந்த கரும்புச்சாறு பயன்படுகிறது. மேலும் மஞ்சள் காமாலை நோய்களை தீர்க்கக் கூடிய ஆற்றல் கரும்புச்சாறுக்கு உள்ளது.

கரும்புச்சாறு கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனிசு போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் எலும்பை வலிமையாக கூடிய தன்மை இதற்கு உள்ளதால் கட்டாயம் வாரத்துக்கு ஒரு முறை கரும்பு சாறு குடிப்பது நல்லது.

Cane juice

பற்களை வலிமையாக்குவதோடு மட்டுமல்லாமல், பல் எனாமலை பாதுகாக்கவும் உதவி செய்கிறது. பற்சிதை எதிர்த்து போராடக்கூடிய ஆற்றல் இந்த கரும்புச்சாறுக்கு உள்ளது.

நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க கரும்புச்சாறில் உள்ள அமினோ அமிலங்கள் பயன்படுகிறது. மேலும் தூக்கத்தை தோண்டவும் இது உதவி செய்கிறது.

எனவே மேற்கூறிய நன்மைகளை அள்ளித் தரக்கூடிய கரும்புச்சாறை கோடையில் நீங்கள் மிஸ் பண்ணாமல் குடிப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெற முடியும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam